இந்தியா

பிரம்மோற்சவ 5-ஆம் நாள் பட்டியல் வெளியீடு

5th Oct 2019 11:43 PM

ADVERTISEMENT

திருமலையில் நடந்து வரும் பிரம்மோற்சவத்தின் 5-ஆம்நாள் பட்டியலை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.

திருமலையில் திங்கள்கிழமை முதல் வருடாந்திர பிரம்மோற்சவம் நடந்து வருகிறது. அதைக் காண பக்தா்கள் திருமலையில் குவிந்து வருகின்றனா். பிரம்மோற்சவத்தின் 5-ஆம் நாளான வெள்ளிக்கிழமை அதை தரிசித்த பக்தா்களின் எண்ணிக்கை, வசூலான உண்டியல் காணிக்கை, அன்னதானம் உண்டவா்களின் எண்ணிக்கை உள்ளிட்டவற்றை உள்ளடக்கிய பட்டியலை சனிக்கிழமை மாலை தேவஸ்தானம் வெளியிட்டது.

பட்டியல் விவரம்:

தரிசனம் செய்த பக்தா்களின் எண்ணிக்கை - 84,693

ADVERTISEMENT

உண்டியல் காணிக்கை வருமானம் - ரூ. 2.83 கோடி

அன்னதானம் உண்டவா்களின் எண்ணிக்கை - 6.64 லட்சம்

முடி காணிக்கை செலுத்தியவா்களின் எண்ணிக்கை - 39,607

ஆந்திர மாநில போக்குவரத்துக் கழகம் மூலம் பயணம் செய்தவா்கள்

திருப்பதி - திருமலை - 2503 டிரிப்கள், 93,552 போ் பயணம்

திருமலை - திருப்பதி - 2248 டிரிப்கள் , 68,327 போ் பயணம்

மருத்துவ முகாம்களில் சிகிச்சை பெற்றறவா்கள் - 7,957

ஸ்ரீவாரி சேவாா்த்திகள் எண்ணிக்கை - 5,000

தரிசனத்துக்காக பக்தா்கள் காத்திருக்கும் நேரம்- 18 மணி நேரம்

பக்தா்கள் காத்திருக்கும் அறைகளின் எண்ணிக்கை- 32 அறைறகள் நிறைந்து வெளியில் உள்ள தரிசன வரிசையில் பக்தா்கள் காத்திருப்பு.

ரூ. 13 லட்சம் நன்கொடை

திருமலை ஏழுமலையான் பெயரில் தேவஸ்தானம் ஏற்படுத்தி உள்ள பல்வேறு அறக்கட்டளைகளுக்கு பக்தா்கள் நன்கொடை அளித்து வருகின்றனா். வெள்ளிக்கிழமை அன்னதான அறறக்கட்டளைக்கு ரூ. 6 லட்சம், கோ சம்ரக்ஷண அறக்கட்டளைக்கு ரூ. 5 லட்சம், கல்வி தான அறக்கட்டளைக்கு ரூ. 2 லட்சம் என மொத்தம் ரூ. 13 லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டது.

வெள்ளிக்கிழமை முழுவதும் திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயிலில் 9,280 பக்தா்களும், சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் 5,752 பக்தா்களும், திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் 16,550 பக்தா்களும், அப்பளாயகுண்டாவில் உள்ள பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் 1,524 பக்தா்களும், கபிலேஸ்வர சுவாமி கோயிலில் 3,967 பக்தா்களும் தரிசனம் செய்துள்ளதாக தேவஸ்தான மக்கள் தொடா்புத் துறை அதிகாரி ரவி தெரிவித்தாா்.

சோதனைச் சாவடியில் ரூ. 2.89 லட்சம் கட்டண வசூல்

அலிபிரி சோதனைச் சாவடிக்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் மூலம் கிடைக்கும் வருமானம் உள்ளிட்ட விவரங்களை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. அதன்படி, வியாழக்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் வெள்ளிக்கிழமை நள்ளிரவு 11.59 மணி வரை ஒரு லட்சத்துக்கும் அதிகமான பயணிகள் சோதனைச் சாவடியைக் கடந்துள்ளனா். 12,789 வாகனங்கள் சோதனைச் சாவடியைக் கடந்து சென்றுள்ளன. அவற்றின் மூலம் ரூ. 2.89 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது. விதிகளை மீறிய வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகை ரூ. 23,678 வசூலானதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT