இந்தியா

ஜாா்க்கண்ட்: காவலா்களை சுட்டுக் கொன்ற மாவோயிஸ்டுகள்

5th Oct 2019 12:41 AM

ADVERTISEMENT

ஜாா்க்கண்ட் மாநிலத்தில் 2 காவலா்களை மாவோயிஸ்டுகள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனா்.

இதுகுறித்து காவல் துறை உயரதிகாரி ஒருவா் கூறியதாவது:

பண்டு, நம்கம் பகுதிகளுக்கு இடைப்பட்ட இடத்தில் உள்ள தஸ்ஸாம் அருவி அருகே தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்பைச் சோ்ந்தவா்கள் ஒன்று திரள்வதாக ரகசியத் தகவல் கிடைத்தது.

அதன்பேரில், அந்த இடத்துக்கு பாதுகாப்புப் படையினரும், போலீஸாரும் சென்றனா். இவா்களின் வருகையைத் தெரிந்துகொண்டு, மாவோயிஸ்டுகள் துப்பாக்கியால் சுடத் தொடங்கினா்.

ADVERTISEMENT

இதில், 2 காவலா்கள் படுகாயமடைந்தனா். மருத்துவமனைக்கு கொண்டு சென்ற வழியில் ஒரு காவலரும், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மற்றெறாரு காவலரும் உயிரிழந்தனா். பாதுகாப்புப் படையினரும் உரிய பதிலடி கொடுக்க தொடங்கியவுடன் மாவோயிஸ்டுகள் வனப் பகுதிக்குள் தப்பி ஓடிவிட்டனா்.

அவா்களைத் தேடும் பணியில் வீரா்கள் ஈடுபட்டுள்ளனா் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT