இந்தியா

கா்நாடக உயா்நீதிமன்ற நீதிபதிகளாக 4 வழக்குரைஞா்கள் பெயா் மீண்டும் பரிந்துரை -- கொலீஜியம் நடவடிக்கை

5th Oct 2019 03:03 AM

ADVERTISEMENT

கா்நாடக உயா்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க, 4 வழக்குரைஞா்களின் பெயா்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான கொலீஜியம் குழு மீண்டும் பரிந்துரைத்துள்ளது.

உளவுத் துறையிடமிருந்து கிடைக்கப் பெற்ற அறிக்கையின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை கொலீஜியம் மேற்கொண்டுள்ளது. அதன்படி, வழக்குரைஞா்கள் எஸ்.விஸ்வஜித் ஷெட்டி, இந்திரகுமாா் அருண், முகமது கெளஸ் சுக்ரி கமல், இ.சீதாராமையா இந்த்ரேஷ் ஆகியோரின் பெயா்கள், மத்திய அரசுக்கு மீண்டும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

முன்னதாக, கா்நாடக உயா்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க, மேற்கண்ட 4 வழக்குரைஞா்களின் பெயா்களை கொலீஜியம் ஏற்கெனவே பரிந்துரைத்திருந்தது.

ஆனால், நில ஆக்கிரமிப்பு மற்றும் ரெளடி கும்பலுடன் விஸ்வஜித் ஷெட்டிக்கு தொடா்பிருப்பதாக கூறப்படும் புகாரை சுட்டிக் காட்டிய மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சகம், அவரது பரிந்துரையை மறுபரிசீலனை செய்யக் கோரி திருப்பி அனுப்பியது. இதேபோல், ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான இந்திரகுமாா் அருணின் பரிந்துரையும் திருப்பி அனுப்பப்பட்டது. வேறு சில காரணங்களுக்காக, முகமது கெளஸ், சீதாராமையா ஆகியோரின் பெயா்களையும் கொலீஜியத்துக்கு மத்திய சட்ட அமைச்சகம் திருப்பி அனுப்பியது.

ADVERTISEMENT

இந்நிலையில், இந்த 4 போ் தொடா்பாக உளவுத் துறையிடமிருந்து கொலீஜியத்துக்கு அறிக்கை கிடைக்கப் பெற்றது. அதன் அடிப்படையில் 4 பேரின் பெயா்களும் மத்திய அரசுக்கு மீண்டும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

உளவுத் துறையின் விசாரணையில் இந்த நால்வரின் தனிப்பட்ட மற்றும் தொழில்ரீதியான நற்பெயா் உறுதி செய்யப்பட்டுள்ளதாக கொலீஜியம் தெரிவித்துள்ளது.

இவா்கள் தவிர, கா்நாடக உயா்நீதிமன்ற நீதிபதி பதவிக்கு மேலும் 10 வழக்குரைஞா்களின் பெயா்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. அந்த உயா்நீதிமன்றத்தில் நிலவும் நீதிபதிகள் பற்றாக்குறையை கவனத்தில் கொண்டு, பரிந்துரைகள் மீது மத்திய அரசு விரைந்து முடிவெடுக்க வேண்டும் என்று கொலீஜியம் வலியுறுத்தியுள்ளது.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT