இந்தியா

மகாத்மா காந்தி, லால் பகதூர் சாஸ்திரி பிறந்தநாள் நினைவு விடியோ வெளியிட்ட பிரதமர் மோடி

2nd Oct 2019 09:06 AM

ADVERTISEMENT

 

மகாத்மா காந்தி மற்றும் லால் பகதூர் சாஸ்திரி ஆகியோரின் பிறந்த நாள் அக்டோபர் 2-ஆம் தேதி  நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அவர்களது நினைவிடங்களில் பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார். 

இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் இருவரின் பெருமையையும் எடுத்துரைக்கும் விதமாக விடியோப் பதிவுகளை பிரதமர் மோடி புதன்கிழமை பதிவிட்டுள்ளார். 

தேசத்தின் மகாத்மா காந்தியியடிகளின் 150-வது பிறந்தநாளில் எனது வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

ADVERTISEMENT

நமது அன்பிற்குரிய பாபுவுக்கு மரியாதைக்குரிய வணக்கம்! மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மனிதகுலத்துக்கு அவர் ஆற்றிய பங்களிப்புக்கு நாம் அனைவரும் நன்றி தெரிவித்துக் கொள்வோம். அவரது கனவுகளை நனவாக்குவதற்கும் சிறந்த முயற்சியை உருவாக்குவதற்கும் தொடர்ந்து கடினமாக உழைக்க உறுதியேற்போம்.

 

 

'ஜெய் ஜவான் - ஜெய் கிஸான்' பிரகடனத்தை முன்வைத்த நமது முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை சமர்பிப்போம்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT