இந்தியா

விழாக் கால சலுகை.. ஜியோ செல்போன் விலை அதிரடியாகக் குறைப்பு: முகேஷ் அம்பானி அறிவிப்பு

2nd Oct 2019 01:18 PM

ADVERTISEMENT


நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகைகள் எல்லாம் வரிசைக் கட்டி வரும் நிலையில், விழாக் கால சலுகையாக ஜியோ செல்போன் விலையை அதிரடியாகக் குறைத்துள்ளார் முகேஷ் அம்பானி.

பல்வேறு வணிக நிறுவனங்கள் தங்களது விழாக் கால சலுகையை அறிவித்து வரும் நிலையில், ஜியோ மட்டும் சும்மா இருக்குமா என்ன? அறிவித்துவிட்டார் முகேஷ் அம்பானி.

ஜியோ நிறுவனம் வெளியிட்டிருக்கும் சலுகை விலை பற்றிய அறிக்கையில், நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இதுவரை 4ஜி வசதி கொண்ட ஜியோ செல்போன் ரூ.1,500க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது விழாக் கால சலுகையாக இது ரூ.699க்கு விற்பனை செய்யப்பட உள்ளது.

இந்த சலுகை மூலம், வாடிக்கையாளர்கள் ரூ.800ஐ சேமிக்கலாம். இந்த சலுகைக்கு எந்த மறைமுக விதிமுறைகளும் இல்லை. ஏற்கனவே இருந்த எக்ஸ்சேஞ்ச் என்ற விதிமுறை கூட இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த ஜியோ போனில் 2.4 இஞ்ச் ஸ்கிரீன், 2 ஆயிரம் எம்ஏஎச் பேட்டரி, 2 எம்.பி. பேக் கேமரா, 0.3 எம்.பி. ஃபிரண்ட் கேமரா வசதி உள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT