இந்தியா

பிளாஸ்டிக் பைகளுக்குப் பதிலாக துணிப்பைகளை விநியோகிக்கும் டெல்லி போலீசார்! மக்கள் அமோக வரவேற்பு

2nd Oct 2019 02:41 PM | Muthumari

ADVERTISEMENT

 

காந்தியடிகளின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு பிளாஸ்டிக் பைகளுக்குப் பதிலாக கடைக்காரர்கள் மற்றும் பொதுமக்களுக்கு துணிப்பைகளை விநியோகித்து பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர் டெல்லி போலீசார். 

மகாத்மா காந்தியடிகளின் 150வது பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் பெரும்பாலாக அனைத்து இடங்களிலும் பல்வேறு நிகழ்ச்சிகள், மாணவர்களுக்கான போட்டிகள் என நடத்தப்படுகிறது. 

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014ம் ஆண்டு காந்தியடிகளின் பிறந்தநாளான இன்றுதான் 'தூய்மை இந்தியா' திட்டத்தைக் கொண்டு வந்தார். இது உலக நாடுகளிடையேயும் நல்ல வரவேற்பைப் பெற்றது. அனைத்து நாடுகளும் இந்தத் திட்டத்தை கொண்டு வரவேண்டும் என்றும் உலக நாடுகளுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். 

ADVERTISEMENT

இந்த நிலையில், மகாத்மா காந்தியடிகளின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு டெல்லி போலீசார் விநோதமான முறையில் பிளாஸ்டிக் தவிர்ப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர்.

இன்று காலை முதல் டெல்லியில் பல்வேறு இடங்களில் ரோந்து பணிகளில் ஈடுபடும் போலீசார் கடைகளுக்குச் சென்று அவர்கள் பிளாஸ்டிக் பைகளை உபயோகிக்கிறீர்களா? என்று சோதனை செய்கின்றனர். பிளாஸ்டிக் பைகள் இருக்கும் பட்சத்தில், அதனைப் பெற்றுக்கொண்டு துணிப்பைகளை வழங்குகின்றனர்.

இதுபோன்று பொது இடங்களில் மக்களிடமும் சென்று, அவர்கள் பிளாஸ்டிக் பைகளை வைத்திருந்தால் அதற்குப் பதிலாக துணிப்பைகளை வழங்கி பிளாஸ்டிக் பயன்பாட்டினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அவர்களிடம் எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். டெல்லி போலீசாரின் இந்த வித்தியாசமான அணுகுமுறைக்கு மக்கள் வரவேற்பு அளித்துள்ளனர். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT