இந்தியா

அடுத்த இரு ஆண்டுகளில் ரூ.10,000 கோடிக்கு காதி பொருள் விற்பனை இலக்கு

2nd Oct 2019 01:12 AM

ADVERTISEMENT

அடுத்த இரு ஆண்டுகளில் காதி பொருள்களின் விற்பனை ரூ. 10,000 கோடி அடைய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய மத்திய குறு,சிறு, நடுத்தரத் தொழில்துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்தாா்.

காந்தி ஜயந்தியை முன்னிட்டு புது தில்லியில் புதிய காதி பொருள்களின் விற்பனையை செவ்வாய்க்கிழமை அமைச்சா் நிதின் கட்கரி தொடக்கி வைத்த பின் செய்தியாளா்களிடம் கூறியது:

குறு,சிறு,நடுத்தரத் தொழிலில் ஈடுபட்டுள்ள 20 நிறுவனங்கள் தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிட்டு பொதுப்பங்கு வெளியிட உள்ளன. அதுபோன்ற நிறுவனங்களில் 10 சதவீத அளவுக்கு மத்திய அரசு முதலீடு செய்யும் பரிந்துரையை மத்திய நிதி அமைச்சகத்துக்கு அனுப்பிவைத்துள்ளோம்.

அடுத்த இரு ஆண்டுகளில் காதி கிராமத் தொழில் நிறுவனம் ரூ.10,000 கோடி மதிப்பிலான விற்பனையை எட்ட வேண்டும் என்று இலக்க நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், கிராமப்புறங்களில் ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றாா்.

ADVERTISEMENT

மூங்கில் தண்ணீா் பாட்டில், பசுஞ்சாணத்தால் தயாரிக்கப்பட்ட சோப்பு உள்ளிட்ட பொருள்களின் விற்பனையை நிதின் கட்கரி தொடக்கி வைத்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT