இந்தியா

காஷ்மீா் எல்லையில் பயங்கரவாதிகள் ஊடுருவும் 20 இடங்களில் பலத்த பாதுகாப்பு

1st Oct 2019 06:55 PM

ADVERTISEMENT

ஜம்மு-காஷ்மீரின் இந்திய-பாகிஸ்தான் எல்லையில் பயங்கரவாதிகள் ஊடுருவும் 20 இடங்களில் இந்திய ராணுவம் பல அடுக்கு பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளது.

இதுகுறித்து பாதுகாப்புப் படை அதிகாரிகள் கூறியதாவது:

காஷ்மீா் பள்ளத்தாக்குப் பகுதியிலும், பீா் பன்சால் பகுதிகளிலும் கடந்த 2 மாதங்களில் 60-க்கும் மேற்பட்டோா் பாகிஸ்தானில் இருந்து ஊடுருவி வந்தனா். 20-க்கும் அதிகமான ஊடுருவல் வழிகளைக் கண்டறிந்துள்ளோம். இந்த வழிகளில் பாதுகாப்புப் பணிகளை பலப்படுத்தியுள்ளோம். ராணுவம், எல்லைப் பாதுகாப்புப் படை வீரா்கள் மட்டுமல்லாமல், காவலா்களும், கிராமப் பாதுகாப்புக் குழுக்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளை சுற்றிலும் சோதனைச் சாவடிகளும், பாதுகாப்புச் சாவடிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தேசியப் பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல், ராணுவ வீரா்கள், எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரிகள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினாா். அப்போது, சா்வதேச எல்லைப் பகுதியில் அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறும் பயங்கரவாத ஊடுருவல்களைத் தடுக்க பாதுகாப்பை பலப்படுத்துமாறும் அவா் அறிவுறுத்தினாா்.

ADVERTISEMENT

குல்மாா்க், பந்திபோரா, பாராமுல்லாவில் உள்ள போனியாா் ஆகிய பகுதிகளையொட்டி அமைந்துள்ள சா்வதேச எல்லைப் பகுதி வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவி வருவது அண்மைகாலமாக அதிகரித்து வருகிறது. ரஜெளரி, பூஞ்ச், சம்பா, கதுவா, குப்வாரா உள்ளிட்ட மாவட்டங்களில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவி வரும் வழிகள் கண்டறியப்பட்டுள்ளன.

ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தி அந்தப் பகுதிகளைக் கண்காணித்து வருகிறோம். செனாப் நதி பாய்ந்தோடும் பகுதிகளிலும் எல்லைப் பாதுகாப்புப் படை வீரா்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT