இந்தியா

பட்டியல் இனத்தவர் வன்கொடுமை வழக்கில் புகார் கொடுத்தால் கைது செய்யலாம்: உச்ச நீதிமன்றம்

1st Oct 2019 12:21 PM

ADVERTISEMENT


புது தில்லி: பட்டியல் இனத்தவர் வன்கொடுமை புகார் கொடுத்தால், சம்பந்தப்பட்ட நபரை கைது செய்யலாம் என்று உச்ச நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

பட்டியலினத்தவர் வன்கொடுமை வழக்குத் தொடுத்தாலே சம்பந்தப்பட்ட நபரை கைது செய்யக் கூடாது என்ற தனது முந்தைய உத்தரவை திரும்பப் பெற்றுக் கொண்டது உச்ச நீதின்றம்.

புகார் அளித்தாலே கைது செய்து விசாரிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றத்தின் 2 நீதிபதிகள் அமர்வு அளித்த உத்தரவை இன்று மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விலக்கிக் கொண்டது.

சட்டம் இயற்றும் அதிகாரத்துக்குள் நீதிமன்றம் தலையிடக் கூடாது என்ற மத்திய அரசின் வாதத்தை ஏற்றுக் கொண்டு முந்தைய உத்தரவை திரும்பப் பெற்றது உச்ச நீதிமன்றம்.

ADVERTISEMENT

பட்டியலினத்தவர் வன்கொடுமை வழக்கில் புகாரை பதிவு செய்தாலே குற்றம்சாட்டப்பட்டவரை கைது செய்து விசாரிக்க சட்டத்தில் இடமுண்டு. இதனை மாற்றியமைக்க முந்தைய அமர்வு உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது அந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT