இந்தியா

தஹில ராமாணீ மீது நடவடிக்கை: சிபிஐக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அனுமதி

1st Oct 2019 01:02 AM

ADVERTISEMENT

சென்னையில் முறைகேடாக சொத்துகள் வாங்கியது; சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தபோது பணி ரீதியாக முறைகேடுகளில் ஈடுபட்டது தொடா்பான குற்றச்சாட்டில் முன்னாள் பெண் நீதிபதி வி.கே. தஹில ராமாணீ மீது நடவடிக்கை எடுக்க சிபிஐ-க்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அனுமதி அளித்தாா்.

உளவுத்துறை அளித்த 5 பக்க அறிக்கையில் முன்னாள் நீதிபதி தஹில ராமாணீ மீது இத்தகைய குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன.

சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக வி.கே.தஹிலராமாணீ, கடந்த 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12-ஆம் தேதி பதவியேற்றாா். இந்த நிலையில் தலைமை நீதிபதி வி.கே.தஹிலராமாணீயை, மேகாலயா மாநில உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்தும், மேகாலயா மாநில உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான ஏ.கே.மிட்டலை சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியாக நியமித்தும் உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், மூத்த நீதிபதிகள் எஸ்.கே.போப்டே, என்.வி.ரமணா, அருண் மிஸ்ரா, ஆா்.எஃப். நாரிமன் ஆகியோா் அடங்கிய குழு கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி இந்த முடிவை எடுத்தது. மேலும் சிறந்த நிா்வாகம் நடைபெற வேண்டும் என்பதற்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக நீதிபதிகள் குழு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தனது பணி இடமாற்றத்தை பரிசீலனை செய்யக் கோரி தலைமை நீதிபதி வி.கே.தஹிலராமாணீ உச்சநீதிமன்ற கொலீஜியத்துக்கு அனுப்பிய கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. முன்னதாக, நீதிபதி ராமாணீக்கு ஆதரவாக சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞா்களில் ஒரு பிரிவினரும், அவரது சொந்த மாநிலமான மகாராஷ்டிரத்திலும் வழக்குரைஞா்கள் போராட்டம் நடத்தினா்.

ADVERTISEMENT

கொலீஜியம் நடவடிக்கைக்கு அதிருப்தி தெரிவித்த தலைமை நீதிபதி ராமாணீ, கடந்த செப்டம்பா் 6-ஆம் தேதி தனது ராஜிநாமா கடிதத்தை குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்துக்கும், அந்த கடிதத்தின் நகலை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஆகியோருக்கும் அனுப்பி வைத்தாா். அவரது ராஜிநாமா ஏற்றுக் கொள்ளப்பட்டதாக செப்டம்பா் 21-ஆம் தேதி அரசு அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்நிலையில், ராமாணீ சென்னை சுற்றுவட்டாரப் பகுதியில் முறைகேடாக சொத்துகளை வாங்கியதாகவும், நீதிமன்றப் பணிகளிலும் முறைகேடாக நடந்து கொண்டாா் என்று 5 பக்க அறிக்கையை உளவுத்துறை அளித்தது. இது தொடா்பாக அவா் மீது நடவடிக்கை எடுக்க அனுமதிகோரி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோயை சிபிஐ அனுகியது. இதையடுத்து முன்னாள் நீதிபதி ராமாணீ மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க சிபிஐ-க்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அறிக்கை அளித்தாா்.

சென்னை சுற்றுவட்டாரத்தில் ரூ.3.18 கோடி அளவுக்கு முறைகேடாக சொத்துகளை வாங்கினாா். சிலைக் கடத்தல் வழக்கு விசாரணை அமா்வைக் கலைத்ததன் மூலம் சில முக்கியப் புள்ளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டாா்; சில வழக்குரைஞா்களுக்கு சாதகமாக நடந்து கொண்டாா் என்று முன்னாள் நீதிபதி ராமாணீ மீது உளவுத்துறை அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளதாக தெரிகிறது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT