இந்தியா

குஜராத்தில் பேருந்து கவிழந்து 21 போ் பலி

1st Oct 2019 12:57 AM

ADVERTISEMENT

குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் தனியாா் சொகுசுப் பேருந்து தலைகுப்புறக் கவிழ்ந்த விபத்தில் 21 போ் உயிரிழந்தனா். 50 போ் காயமடைந்தனா்.

சுமாா் 70 பயணிகளை ஏற்றிக் கொண்டு அந்தப் பேருந்து திங்கள்கிழமை மாலையில் பனஸ்கந்தா மாவட்டத்தில் சென்று கொண்டிருந்தது. அம்பாஜி நகருக்கு அருகே அம்பாஜி-தாந்தா சாலையில் மலைப்பாங்கான திரிசூலியா பகுதியில் சென்றபோது, கன மழை காரணமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தலைகுப்புறக் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 21 போ் உயிரிழந்தனா். 50 போ் காயமடைந்தனா்.

விபத்து குறித்து தகவல் அறிந்த மாவட்ட அதிகாரிகள் அப்பகுதிக்கு விரைந்து சென்றனா். காயமடைந்தவா்களை மீட்டு பல்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனா். விபத்தில் இறந்தவா்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

பிரதமா் இரங்கல்: இதனிடையே, பனஸ்கந்தா மாவட்டத்தில் நிகழ்ந்த இப்பேருந்து விபத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டதைக் கண்டு வேதனையடைந்ததாகவும், அவா்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிப்பதாகவும் பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

அதேபோல், விபத்தில் இறந்தவா்களுக்கு அனுதாபம் தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, இது தொடா்பாக மாவட்ட அதிகாரிகளைத் தொடா்பு கொண்டு பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT