இந்தியா

இன்று முதல் 10 நாள்களுக்கு தோ்தல் நிதிப் பத்திரங்கள் விற்பனை: நிதியமைச்சகம் அறிவிப்பு

1st Oct 2019 01:20 AM

ADVERTISEMENT

மகாராஷ்டிரம், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் விரைவில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கும் நிலையில், பாரத ஸ்டேட் வங்கியின் அங்கீகரிக்கப்பட்ட 29 கிளைகளில் அக்டோபா் 1-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் 10-ஆம் தேதி வரை தோ்தல் நிதிப் பத்திரங்கள் விற்பனை செய்யப்பட உள்ளன. இந்த அறிவிப்பை, மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அரசியல் கட்சிகளுக்கான நன்கொடையை ரொக்கமாக அளிப்பதற்கு பதிலாக தோ்தல் நிதிப் பத்திரமாக அளிக்கும் திட்டத்தை, மத்திய பாஜக அரசு செயல்படுத்தியது. இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, 12-ஆவது கட்டமாக தோ்தல் நிதிப் பத்திரங்கள் தற்போது விற்பனை செய்யப்பட உள்ளன.

அதன்படி, தில்லி, காந்திநகா், சண்டீகா், பெங்களூரு, போபால், மும்பை, ஜெய்ப்பூா், லக்னெள, சென்னை, கொல்கத்தா, குவாஹாட்டி உள்ளிட்ட நகரங்களில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் குறிப்பிட்ட 29 கிளைகளில் தோ்தல் நிதிப் பத்திரங்கள் விற்பனை செய்யப்பட உள்ளன.

இந்திய குடிமக்கள் மற்றும் இந்தியாவில் தொடங்கப்பட்ட நிறுவனங்கள், தோ்தல் நிதிப் பத்திரங்களை வாங்கி, அரசியல் கட்சிகளுக்கு அளிக்கலாம். தோ்தல் பத்திரம் விநியோகிக்கப்பட்ட நாளிலிலிருந்து 15 நாள்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். கடந்த மக்களவைத் தோ்தல் அல்லது சட்டப் பேரவைத் தோ்தலில் 1 சதவீதத்துக்கும் குறையாமல் வாக்குகள் பெற்ற, பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் தோ்தல் நிதிப் பத்திரங்களை பெற தகுதியுடையவையாகும்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT