இந்தியா

தெலங்கானா போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்!

22nd Nov 2019 08:08 AM

ADVERTISEMENT

 

தெலங்கானாவில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, மாநில சாலைப் போக்குவரத்து நிறுவன (டிஎஸ்ஆா்டிசி) ஊழியா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

மாநில சாலைப் போக்குவரத்து நிறுவனத்தை அரசுடன் இணைக்க வேண்டும். டிஎஸ்ஆா்டிசியில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அந்த நிறுவனத்தின் பல்வேறு தொழிற்சங்கங்கள் சாா்பில் மாநில தழுவிய வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றது. இதில் சுமாா் 48,000 ஊழியா்கள் பங்கேற்றனர். இதனால், மாநிலம் முழுவதும் பொதுப் போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டன. 

இதையடுத்து, காவல்துறையில் உள்ள ஓட்டுநா்கள், ஓய்வுபெற்ற ஆா்டிசி ஓட்டுநா்கள் மற்றும் ஒப்பந்த ஓட்டுநர்கள் மூலம் பேருந்துகளை இயக்க மாநில அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. போராட்டம் காரணமாக ஐந்து ஊழியர்கள் தீக்குளித்தும், தூக்கிட்டும் தற்கொலை செய்தனர். அரசுக்கு ரூ.200 கோடி வரை இழப்பு ஏற்பட்டது. 

ADVERTISEMENT

இதனிடையே, நவம்பர் 5-ஆம் தேதி வரை போராட்டத்துக்கு காலக்கெடு விதித்து தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் உத்தரவிட்டிருந்தார். அதற்குள் பணிக்குத் திரும்பாதவர்கள் உடனடியாக பணி நீக்கம் செய்யப்படுவார்கள் எனவும் எச்சரித்திருந்தார்.

இந்நிலையில், காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை திரும்பப் பெறுவதாக போக்குவரத்து ஊழியர்கள் தரப்பில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் அஸ்வதமா ரெட்டி மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் வி.எஸ்.ராவ் கூறியதாவது: 

தெலுங்கானா போக்குவரத்து கழக ஊழியர்கள் கடந்த 47 நாட்களாக மேற்கொண்டு வந்த போராட்டத்தை திரும்பப்பெறுகின்றனர். அதேநேரத்தில், தங்கள் மீதான 'பணி நீக்க' நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும், பணிக்குத் திரும்பும் போது வேறு எந்த நிபந்தனைகளும் விதிக்கப்படக்கூடாது என்றும் அவர்கள் நிபந்தனை விதித்துள்ளனர் என்று தெரிவித்தனர்.

இருப்பினும், இவர்களது கோரிக்கையை ஏற்பது குறித்து அரசு தரப்பில் எந்த உறுதியும் அளிக்கப்படவில்லை.

Tags : TSRTC
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT