இந்தியா

திஹார் சிறையில் வைத்து ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை விசாரணை!

22nd Nov 2019 01:15 PM

ADVERTISEMENT

 

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு தொடர்பாக ப.சிதம்பரத்திடம் விசாரணை மேற்கொள்ள 4 பேர் கொண்ட அமலாக்கத்துறை குழு திஹார் சிறைக்கு விரைந்துள்ளது.

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியே விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதில் சிபிஐ தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்திற்கு  ஜாமீன் ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டது. 

ஆனால், அதன்பின்னர் அமலாக்கத் துறை அதிகாரிகளால் கடந்த மாதம் 16ம் தேதி கைது செய்யப்பட்ட ப.சிதம்பரம், நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் ஜாமீன் கோரி அவா் தாக்கல் செய்த மனுவை தில்லி உயா்நீதிமன்றம் கடந்த 15ம் தேதி தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து ப.சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளாார். ப.சிதம்பரத்தின் ஜாமீன் தொடர்பாக உரிய விளக்கம் அளிக்குமாறு அமலாக்கத்துறை இயக்குநரகத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த வழக்கு வருகிற 26ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், இன்று ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொள்கின்றனர். 

ADVERTISEMENT

இவ்வழக்கு தொடர்பாக ப.சிதம்பரத்திடம் விசாரணை மேற்கொள்ள 4 பேர் கொண்ட அமலாக்கத்துறை குழு திஹார் சிறைக்கு விரைந்துள்ளது. 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT