இந்தியா

பணியிட மாற்றம் செய்ததால் கோபமுற்ற காவல்துறை அதிகாரி தற்கொலை முயற்சி!

22nd Nov 2019 06:19 PM

ADVERTISEMENT

 

பணியிட மாற்றம் செய்ததால் கோபமுற்ற காவல்துறை அதிகாரி ஒருவர், காவல் நிலையம் அருகே வைத்து தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பாலாபூர் காவல் நிலையத்தில் நரசிம்மா என்பவர் உதவி துணை ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சமீபத்தில் இடமாற்றம் குறித்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இடமாற்றத்தை ரத்து செய்யுமாறு அவர் உயர் அதிகாரியிடம் கோரிக்கை விடுத்தார். ஆனால், உயரதிகாரி அவரது கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை. 

இதையடுத்து, கோபமுற்ற நரசிம்மா, தற்கொலைக்கு முயன்றார். வெள்ளிக்கிழமை காவல் நிலையம் அருகே தண்ணீர் தொட்டியில் ஏறி, மண்ணெண்ணெய் ஊற்றி, தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டார். இதனைக் கவனித்த அங்குள்ள பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவே, அவர்கள் நரசிம்மாவை அருகில் உள்ள அப்பல்லோ டி.ஆர்.டி.ஓ மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

உதவி ஆய்வாளர் ஸைதுல் வேண்டுமென்றே தன்னை பணியிட மாற்றம் செய்ய பரிந்துரைத்ததாக நரசிம்மா குற்றஞ்சாட்டியுள்ளார். இதன் அடிப்படையில் விசாரணையும் நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT