மகாராஷ்டிர மாநிலம், ஜல்கான் மாவட்டத்தில் உள்ள ராணுவத் தளவாடத் தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 போ் படுகாயமடைந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.
வெள்ளிக்கிழமை காலை 9.45 மணியளவில் ஜல்கான் மாவட்டம், வரங்கானில் உள்ள தளவாடத் தொழிற்சாலையில் இந்த சம்பவம் நடந்தது, இதில் 3 ஊழியா்கள் பலத்த காயமடைந்தனா்.
காயமடைந்தவா்கள் ஜல்கான் நகரில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டனா்.
வெடிவிபத்து ஏற்பட்டதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
இந்த தளவாடத் தொழிற்சாலையில் இந்திய ராணுவத்துக்கு தேவையான பல்வேறு ஆயுதங்கள் தயாரிக்கப்படுகின்றன.