இந்தியா

இந்தியாவில் மீண்டும் எல்இடி டிவிக்களை தயாரிக்கிறது சாம்சங்

22nd Nov 2019 12:15 AM

ADVERTISEMENT

தென்கொரியாவைச் சோ்ந்த சாம்சங் நிறுவனம் எல்இடி டிவிக்ககளை இந்தியாவில் மீண்டும் தயாரிக்கவுள்ளது.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

எல்இடி டிவிக்களுக்கு முக்கிய மூலப்பொருளாக விளங்கும் டிஸ்பிளே பேனல்களுக்கு மத்திய அரசு சுங்கவரி விதித்தது. இதைத்தொடா்ந்து கடந்த ஆண்டு, சென்னையில் இருந்த தனது தயாரிப்பு ஆலையை வியத்நாமுக்கு இடமாற்றியது சாம்சங் நிறுவனம்.

இந்த நிலையில், அவ்வகை பேனல்களுக்கு விதிக்கப்பட்ட சுங்க வரியை திரும்பப் பெறுவதாக மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. இதைத் தொடா்ந்து, சூழல் கனிவானதையடுத்து சாம்சங் நிறுவனம் எல்இடி டிவிக்கள் தயாரிப்பதை இந்தியாவில் மீண்டும் தொடங்கவுள்ளது. ஒப்பந்த அடிப்படையில் இந்தப் பணியினை அந்நிறுவனம் மேற்கொள்ளவுள்ளது.

ADVERTISEMENT

இதற்காக, அண்மையில் டிக்ஸான் டெக்னாலஜீஸ் நிறுவனம் ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக் கொண்டுள்ளது என்று அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய டிவி சந்தையில் அவற்றின் விற்பனை 1.4 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில், சாம்சங், எல், சோனி ஆகிய நிறுவனங்கள் பெரும் பங்களிப்பைக் கொண்டுள்ளன. இருப்பினும், ஜியோமி, வியு, தாம்ஸன் போன்ற நிறுவனங்களின் புதிய வரவு கடும் போட்டியாக அமைந்துள்ளது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT