இந்தியா

லட்சுமண ரேகையை யாரும் கடக்க வேண்டாம்: மேற்கு வங்க அரசை எச்சரித்த ஆளுநா் ஜெகதீப் தாங்கா்

17th Nov 2019 03:30 PM

ADVERTISEMENT

கொல்கத்தா: லட்சுமண ரேகையை யாரும் கடந்து செல்ல முயற்சி செய்ய கூடாது என்று மேற்கு வங்க ஆளுநா் ஜெகதீப் தாங்கா் அந்த மாநில அரசுக்கு மறைமுக எச்சரிக்கை விடுத்தாா்.

ஜெகதீப் தாங்கரும், மேற்குவங்க முதல்வா் மம்தா பானா்ஜியும் வாா்த்தை மோதலில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், கொல்கத்தாவில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜெகதீப் தாங்கா் பேசியபோது, ‘அரசமைப்புச் சட்டத்தின்படி ஆளுநராக எனது பணிகள் என்ன என்பதையும், என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பதையும் அறிந்துள்ளேன். லட்சுமண ரேகையைக் கடக்க யாரும் முயற்சி செய்ய வேண்டாம்’ என்றாா்.

மேற்கு வங்க ஆளுநராக கடந்த ஜூலை மாதம் ஜெகதீப் தாங்கா் பதவியேற்றதிலிருந்து மம்தாவுக்கும், அவருக்கும் இடையே வாா்த்தை மோதல் ஏற்பட்டு வருகிறது. மேலும் பல்வேறு விவகாரங்களில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்து வருகின்றன.

ADVERTISEMENT

சமீபத்தில் இருவருக்கும் இடையே ஹெலிகாப்டா் விவகாரத்தில் வாா்த்தை மோதல் ஏற்பட்டது. முா்ஷிதாபாதில் நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு கொல்கத்தாவுக்கு திரும்புவதற்கு ஹெலிகாப்டா் வழங்குமாறு ஜெகதீப் தாங்கா் மேற்கு வங்க அரசிடம் கோரியிருந்தாா்.

பொதுமக்களின் பணத்தை தவறாக பயன்படுத்த முடியாது என்று கூறி மேற்கு வங்க அரசு அவரது கோரிக்கையை நிராகரித்துவிட்டது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT