இந்தியா

ஆந்திரத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவர் கைது

17th Nov 2019 04:33 AM

ADVERTISEMENT

 

திருப்பதி: ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், குரபல கோட்டா அருகே பெற்றோருடன் திருமண விழாவுக்குச் சென்ற ஆறு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், லாரி கிளீனரை போலீஸார் கைது செய்தனர்.

சித்தூர் மாவட்டம், தம்புள்ள பள்ளியைச் சேர்ந்தவர் சித்தா ரெட்டி, அவரது மனைவி உஷாராணி. இத்தம்பதி குரபலகோட்டா அருகே கடந்த 8-ஆம் தேதி நடைபெற்ற உறவினர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தங்களுடைய ஆறு வயது மகளுடன் சென்றிருந்தனர். அன்று இரவு திருமண வரவேற்பு முடிந்தநிலையில், இரவு 12 மணி அளவில் சிறுமியைக் காணவில்லை.

இதையடுத்து, காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். இந்நிலையில் திருமண மண்டபத்தின் அருகே உள்ள வனப் பகுதியில் சிறுமியின் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீஸார் ரத்தக் காயங்களுடன் கிடந்த சிறுமியின் சடலத்தை மீட்டு, சந்தேக மரணமாக வழக்குப்  பதிந்து பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.  இதையடுத்து, திருமண மண்டபத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்த  காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தபோது, அடையாளம் தெரியாத நபர் ஒருவருடன் அன்று இரவு வர்ஷிதா சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, மர்ம நபர் குறித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. குற்றவாளியைப் பிடிக்க போலீஸார் அவருடைய படத்தை வெளியிட்டனர்.

ADVERTISEMENT

இந்நிலையில், தம்பலப்பள்ளி அருகே உள்ள பசினிகொண்டாவைச் சேர்ந்த லாரி கிளீனர் முகமது ரபியைப்  பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து, அவரை போலீஸார் கைது செய்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT