இந்தியா

மகாராஷ்டிர மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது

12th Nov 2019 05:50 PM

ADVERTISEMENT


புது தில்லி: ஆட்சியமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்த நிலையில், மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

மகாராஷ்டிர மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவது தொடர்பாக மத்திய அமைச்சரவை  கொடுத்த பரிந்துரைக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்ததை அடுத்து, அம்மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

மகாராஷ்டிராவில் எந்த தனிக்கட்சிக்கும் ஆட்சியமைக்கும் அளவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கூட்டணி அமைத்து ஆட்சியமைப்பதில் பெரும் சிக்கல் நீடித்த நிலையில் பாஜக, சிவ சேனை, தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு தனித்தனியே ஆட்சியமைக்க வருமாறு ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி அழைப்பு விடுத்தார்.

எனினும், எந்த கட்சியும், பிற கட்சியின் ஆதரவைப் பெற்று ஆட்சியமைக்க முடியாத நிலையும், கால அவகாசம் கோரி, அதுவும் நிராகரிக்கப்பட்ட நிலையில் ஆட்சியமைப்பதில் இழுபறி நீடித்தது.

ADVERTISEMENT

மேலும் படிக்க.. மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை:  மத்திய அரசுக்கு ஆளுநர் அறிக்கை தாக்கல்

இந்த நிலையில் மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துமாறு மத்திய அரசுக்கு ஆளுநர் பரிந்துரை செய்தார். இந்த பரிந்துரை குறித்து மத்திய அமைச்சரவை கூடி ஆலோசனை நடத்தியது. இதில், குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தலாம் என்று மத்திய அமைச்சரவையும் பரிந்துரை செய்தது. மத்திய அரசின் இந்த பரிந்துரைக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

மேலும் படிக்க.. குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் என்றால் என்ன? இதற்கு முன்பு எப்போது நடந்தது?

மகாராஷ்டிர பேரவைத் தேர்தலில் பாஜக 105 இடங்களையும், சிவ சேனை 56 இடங்களையும், தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களையும் வென்றது குறிப்பிடத்தக்கது.

மகாராஷ்டிராவில் சட்டப்பேரவைத் தேர்தலில் யாருக்கும் ஆட்சியமைக்கும் அளவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஆட்சியமைப்பதில் தொடர்ந்து இழுபறி காரணமாக, இன்று அம்மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தும் நிலைக்குச் சென்றுள்ளது.
 

Tags : Maharashtra
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT