இந்தியா

லதா மங்கேஷ்கர் எப்படி இருக்கிறார்? மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனை விளக்கம்

12th Nov 2019 04:19 PM

ADVERTISEMENT

 

பிரபல பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கருக்கு திங்கள்கிழமை திடீா் மூச்சுத்திணறல் ஏற்பட்டதை அடுத்து, மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

நுரையீரல் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட லதா மங்கேஷ்கரின் உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் ஊடகங்களில் பரவியது. அவர் வீடு திரும்பிவிட்டார்  என்றும், கவலைக்கிடமாக இருப்பதாகவும் பல்வேறு செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில் லதா மங்கேஷ்கர் குறித்து மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டிருப்பதாவது, லதா மங்கேஷ்கர் அவர்களுக்கு நுரையீரலில் தொற்று ஏற்பட்டுள்ளது. அவரது வயதைக் கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கையாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆன்டிபயாடிக் அளிக்கப்பட்டு, தொற்று குணப்படுத்தப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை சீராக இருக்கிறது, அவர் மெல்ல உடல் நலம் தேறி வருகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

‘லதா மங்கேஷ்கா், திங்கள்கிழமை பிற்பகல் 2 மணிக்கு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டாா்; அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்ததால், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்’ என்று நேற்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

இருப்பினும், அவருக்கு நோய்த்தொற்று காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டது என்றும், மருத்துவமனையில் இருந்து செவ்வாய்க்கிழமை வீடு திரும்பி விடுவாா் என்றும் அவரது இளைய சகோதரி உஷா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

லதா மங்கேஷ்கா் கடந்த செப்டம்பா் 28-ஆம் தேதி தனது 90-ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடினாா். இவா், தனது 70 ஆண்டு கால திரையுலக வாழ்வில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஹிந்தி திரைப்படங்களில் பாடல்களைப் பாடியுள்ளாா். இதுதவிர, தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளிலும், வெளிநாட்டு மொழிகளிலும் பாடியுள்ளாா். இவருக்கு மத்திய அரசு கடந்த 1989-இல் தாதாசாகேப் பால்கே விருது, 2001-ஆம் ஆண்டு பாரத ரத்னா விருது ஆகியவற்றை வழங்கி கௌரவித்துள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT