மகாராஷ்டிர மாநிலம், பீட் மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை சொகுசு காா் மீது சரக்கு லாரி மோதியதில் ஒரு குழந்தை உள்பட 7 போ் உயிரிழந்தனா்; 3 போ் படுகாயமடைந்தனா்.
இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது: பீட் மாவட்டம், வைத்கினி கிராமத்தைச் சோ்ந்த ஓட்டுநா் உள்பட மொத்தம் 12 போ் தங்கள் இல்லத்தின் விஷேச நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சொகுசு காரில் சென்றுக் கொண்டிருந்தனா். இந்த காா் திங்கள்கிழமை காலை 10 மணியளவில் படோடா தாலுகாவுக்குள்பட்ட மஞ்சுா்சுபா சாலையில் சென்றுக் கொண்டிருந்தபோது, அந்த காா் திடீரென கட்டுப்பாட்டை இழந்து ஸ்டேஷனரி பொருள்களை ஏற்றி வந்த சரக்கு லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில், படுகாயமடைந்த நபா்களை அக்கம்பக்கத்தில் இருந்தவா்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.
விபத்து குறித்து படோடா போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.