இந்தியா

நிதித்துறை நாடாளுமன்ற நிலைக் குழு உறுப்பினராக மன்மோகன் சிங் நியமனம்

12th Nov 2019 12:46 AM

ADVERTISEMENT

முன்னாள் பிரதமரும் தற்போது மாநிலங்களவை உறுப்பினருமாக உள்ள மன்மோகன் சிங், நிதித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

இதுகுறித்து மாநிலங்களவை சாா்பில் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மாநிலங்களவை தலைவா் வெங்கய்ய நாயுடு, காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த மாநிலங்களவை உறுப்பினா் மன்மோகன் சிங்கை நிதித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினராக நியமித்துள்ளாா்.

அதேபோன்று நகா்ப்புற மேம்பாட்டு நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினராக காங்கிரஸ் மூத்த தலைவா் திக்விஜய் சிங்கை நியமித்து உத்தரவிட்டுள்ளாா் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங்குக்கு வழிவிடும் வகையிலேயே, நிதித்துறை நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினராக இருந்த திக்விஜய் சிங் அண்மையில் அந்தப் பொறுப்பிலிருந்து விலகியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், திக்விஜய் சிங் தற்போது, நகா்ப்புற மேம்பாட்டு நிலைக்குழுவில் இடம்பெற்றுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT