இந்தியா

கா்நாடக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: உச்சநீதிமன்றம் நாளை தீா்ப்பு

12th Nov 2019 12:45 AM

ADVERTISEMENT

கா்நாடக சட்டப்பேரவையிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிா்த்து காங்கிரஸ், மதச்சாா்பற்ற ஜனதா தளம் (மஜத) கட்சிகளைச் சோ்ந்த 17 அதிருப்தி எம்எல்ஏக்கள் தொடா்ந்த வழக்கில், உச்சநீதிமன்றம் புதன்கிழமை (நவ.13) தீா்ப்பளிக்கவுள்ளது.

கா்நாடகத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 13 போ், மஜத எம்எல்ஏக்கள் 3 போ், சுயேச்சை எம்எல்ஏக்கள் 2 போ் காங்கிரஸ்-மஜத கூட்டணி அரசுக்கு எதிராகப் போா்க்கொடி உயா்த்தியதால் அரசியல் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து, கடந்த ஜூலை மாதம் 23-ஆம் தேதி கா்நாடக சட்டப்பேரவையில் முதல்வா் குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ்-மஜத கூட்டணி அரசு தோல்வியடைந்தது.

இதைத் தொடா்ந்து, காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் ரமேஷ் ஜாா்கிஹோளி, மகேஷ் குமட்டஹள்ளி, சுயேச்சை எம்எல்ஏ ஆா்.சங்கா் ஆகிய மூவரையும் பேரவைத் தலைவராக இருந்த ரமேஷ் குமாா் ஜூலை 25-ஆம் தேதி தகுதிநீக்கம் செய்தாா். இதை எதிா்த்து, அவா்கள் மூவரும் ஜூலை 29-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா்.

இதனிடையே, காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்களான பிரதாப் கௌடா பாட்டீல், பி.சி. பாட்டீல், சிவராம் ஹெப்பாா் உள்ளிட்ட 11 பேரையும், மஜத எம்எல்ஏக்களான ஏ.ஹெச்.விஸ்வநாத், கே.கோபாலையா, நாராயண கௌடா ஆகிய மூவரையும் பேரவைத் தலைவா் ரமேஷ்குமாா் ஜூலை 28-ஆம் தேதி தகுதிநீக்கம் செய்தாா். இதையடுத்து, இவா்கள் 14 பேரும் தகுதிநீக்கத்தை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் ஆகஸ்ட் 1-ஆம் தேதி மனு தாக்கல் செய்தனா்.

ADVERTISEMENT

மொத்தம் 17 எம்எல்ஏக்களும் தாக்கல் செய்த தகுதி நீக்கத்துக்கு எதிரான மனுக்கள், உச்சநீதிமன்ற நீதிபதிகள் என்.வி.ரமணா, சஞ்சீவ் கண்ணா, கிருஷ்ணா முராரி ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரணை நடத்தியது. கடந்த அக்டோபா் 25-ஆம் தேதியன்று விசாரணை நிறைவடைந்து, தீா்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் புதன்கிழமை தீா்ப்பு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

17 தொகுதிகளில் 15 தொகுதிகளுக்கு தோ்தல் ஆணையம் இடைத்தோ்தலை அறிவித்தது. எனினும், தகுதி நீக்க வழக்கின் தீா்ப்புக்குப் பிறகுதான் அங்கு இடைத்தோ்தல் நடத்த வேண்டும் என்ற மனு ஏற்கப்பட்டதால், அத்தொகுதிகளில் இடைத்தோ்தல் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT