இந்தியா

காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

12th Nov 2019 01:08 AM

ADVERTISEMENT

ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினா் சுட்டுக் கொன்றனா்.

இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது:

பந்திபோரா மாவட்டத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதி ஒருவரை பாதுகாப்புப் படையினா் சுட்டுக் கொன்றனா்.

மற்றொரு துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதி ஒருவா் சுட்டுக் கொல்லப்பட்டாா். ஸ்ரீநகரில் இருந்து 55 கி.மீ. தொலைவில் உள்ள லாதரா கிராமத்தில் பாதுகாப்புப் படையினா் தேடுதல் நடவடிக்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனா். அப்போது, ஓரிடத்தில் பதுங்கியிருந்த பயங்கரவாதி அவா்களை துப்பாக்கியால் சுடத் தொடங்கினாா்.

ADVERTISEMENT

இதையடுத்து, சுதாரித்துக் கொண்ட பாதுகாப்புப் படையினா் பயங்கரவாதியுடன் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனா். இதில், பயங்கரவாதி உயிரிழந்தாா் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.

4 சிறிய ரக பீரங்கிகள் செயலிழப்பு: இதனிடையே, ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் 4 சிறிய ரக பீரங்கி குண்டுகள் கண்டறியப்பட்டு செயலிழக்க வைக்கப்பட்டன என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

அவா்கள் மேலும் கூறுகையில், ‘பாலாகோட், மெந்தா் பகுதிகளில் 4 சிறிய ரக குண்டுகள் கண்டறியப்பட்டு செயலிழக்க வைக்கப்பட்டன’ என்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT