ஒடிஸா மாநிலம், பாராதீப் துறைமுக நகரில் உறங்கிக் கொண்டிருந்த கட்டடத் தொழிலாளி படுக்கையில் வைத்திருந்த செல்லிடப்பேசி திடீரென வெடித்துச் சிதறியதில் உயிரிழந்தார்.
பாராதீப் நகரில் அதிரபங்கி பகுதியில் கட்டடத் தொழிலாளி குண பிரதான் (22) தன்னுடன் பணிபுரிந்து வரும் 3 தொழிலாளர்களுடன் ஞாயிற்றுக்கிழமை இரவு உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது, செல்லிடப்பேசி பேட்டரியை சார்ஜ் செய்யும் மின்னிணைப்பு தந்துவிட்டு, அதை உறங்கிக் கொண்டிருந்த மெத்தை மீது வைத்திருந்தார்.
திடீரென அவரது செல்லிடப்பேசி வெடித்துச் சிதறியதில், சம்பவ இடத்திலேயே குண பிரதான் உயிரிழந்தார். மற்ற 3 தொழிலாளர்களும் காயமடைந்த நிலையில் அவர்களும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பாராதீப் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.