இந்தியா

உண்டியல் காணிக்கை ரூ. 2.14 கோடி

12th Nov 2019 03:10 AM

ADVERTISEMENT

திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை ஞாயிற்றுக்கிழமை ரூ. 2.14 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.
 திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்க வரும் பக்தர்கள் காணிக்கைகளை கோயிலுக்குள் உள்ள உண்டியலில் செலுத்தி வருகின்றனர். அவற்றை தேவஸ்தானம் தினந்தோறும் கணக்கிட்டு, வங்கிகளில் வரவு வைத்து வருகிறது. அதன்படி, ஞாயிற்றுக்கிழமை பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளைக் கணக்கிட்டதில், தேவஸ்தானத்துக்கு ரூ. 2.14 கோடி வருவாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
 82,593 பக்தர்கள் தரிசனம்
 திருப்பதி ஏழுமலையானை ஞாயிற்றுக்கிழமை முழுவதும் 82,593 பக்தர்கள் தரிசனம் செய்தனர். இவர்களில் 27,209 பேர் முடி காணிக்கை செலுத்தினர். திங்கள்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறையில் உள்ள 5 அறைகளில் பக்தர்கள் ஏழுமலையான் தரிசனத்துக்காக காத்திருந்தனர். தர்ம தரினத்தில் 4 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் ஏழுமலையானைத் தரிசித்தனர்.
 ரூ. 300 விரைவு தரிசனம், திவ்ய தரிசனம் மற்றும் நேர ஒதுக்கீடு தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தர்கள் 3 மணி நேரத்தில் ஏழுமலையானை தரிசித்துத் திரும்பினர்.
 திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயிலில் 9,278 பக்தர்களும், சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் 8,182 பக்தர்களும், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் 19,444 பக்தர்களும், அப்பளாயகுண்டாவில் உள்ள பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை முழுவதும் 1,893 பக்தர்களும், கபிலேஸ்வர சுவாமி கோயிலில் 3,290 பக்தர்களும் தரிசனம் செய்துள்ளதாக தேவஸ்தான மக்கள் தொடர்புத் துறை அதிகாரி ரவி தெரிவித்தார்.
 
 சோதனைச் சாவடியில் ரூ. 2.18 லட்சம் கட்டண வசூல்
 அலிபிரி சோதனைச் சாவடிக்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் மூலம் கிடைக்கும் வருமானம் உள்ளிட்ட விவரங்களை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. அதன்படி, சனிக்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 11.59 மணி வரை 87,160 பயணிகள் சோதனைச் சாவடியைக் கடந்துள்ளனர். 10,169 வாகனங்கள் சோதனைச் சாவடியை கடந்து சென்றுள்ளன. அவற்றின் மூலம் ரூ. 2.18 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது. விதிகளை மீறிய வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகை ரூ. 14,200 வசூலானதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
 
 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT