இந்தியா

பந்திபூராவில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

11th Nov 2019 10:50 AM

ADVERTISEMENT

 

இந்திய எல்லைக்குள் ஊடுருவும் பயங்கரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினர் மற்றும் ராணுவத்தினா் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பந்திபூரா பகுதியில் பாதுகாப்புப் படையினர் ரகசிய தேடுதல் வேட்டையில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.

அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இதில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்னர். அவர்களிடமிருந்து வெடிபொருட்கள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 

ADVERTISEMENT

இதையடுத்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக காஷ்மீர் போலீஸார் தெரிவித்தனர்.

Tags : terrorist
ADVERTISEMENT
ADVERTISEMENT