இந்தியா

நேர்மையுடனும், விடாமுயற்சியுடனும் நாட்டுக்கு சேவை செய்தவர்: டி.என்.சேஷனுக்கு பிரதமர் மோடி புகழஞ்சலி

11th Nov 2019 10:00 AM

ADVERTISEMENT

 

முன்னாள் தலைமைத் தோ்தல் ஆணையா் டி.என்.சேஷன் காலமானாதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்தார். அதில், நேர்மையுடனும், விடாமுயற்சியுடனும் நாட்டுக்கு சேவை செய்தவர் என டி.என். சேஷனுக்கு புகழஞ்சலி செலுத்தினார்.

முன்னாள் தலைமைத் தோ்தல் ஆணையா் டி.என்.சேஷன் (86), உடல் நலக்குறைவால் சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு காலமானாா்.

இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி தனது சுட்டுரைப் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் அவர் பதிவிட்டுள்ளதாவது,

ADVERTISEMENT

ஸ்ரீ டி.என். சேஷன் ஒரு சிறந்த அரசு ஊழியர். அவர் மிகுந்த நேர்மையுடனும், விடாமுயற்சியுடனும் நாட்டுக்கு சேவை செய்தார். தேர்தல் சீர்திருத்தங்களை நோக்கிய அவரது முயற்சிகள் நமது ஜனநாயகத்தை வலுவாகவும், அதிக பங்களிப்புடனும் ஆக்கியுள்ளன. அவரது மறைவு வேதனையை ஏற்படுத்தியுள்ளது. ஓம் சாந்தி என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT