இந்தியா

உத்தவ் தாக்ரே - சரத் பவார் சந்திப்பு

11th Nov 2019 01:36 PM

ADVERTISEMENT

 

மகாராஷ்டிரத்தில் ஆட்சியமைப்பது தொடர்பாக சிவசேனைத் தலைவர் உத்தவ் தாக்ரே மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஆகியோர் திங்கள்கிழமை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக, மத்திய அமைச்சரவையில் இருந்து ராஜிநாமா செய்வதாக மத்திய கனரக தொழில்கள் மற்றும் பொது நிறுவனங்களின் அமைச்சரும், சிவசேனை எம்.பி.யுமான அரவிந்த் சாவந்த் அறிவித்தார்.

இதையடுத்து, சிவசேனை தரப்பில் அடுத்தகட்ட நடவடிக்கையை முன்னெடுத்துவிட்டோம். இனி அனைவருக்கும் ஏற்புடைய குறைந்தபட்ச செயல்திட்டத்தின் அடிப்படையில் மகாராஷ்டிரத்தில் ஆட்சியமைக்க வேண்டிய பொறுப்பு காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளிடம் தான் உள்ளது என்று சிவசேனை மூத்த தலைவர் சஞ்சய் ரௌத் தெரிவித்தார்.

ADVERTISEMENT

மேலும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து சிவசேனை விலக முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியானதைத் தொடர்ந்து இச்சந்திப்பு நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT