இந்தியா

கிரெடிட், டெபிட் கார்டு விவரங்கள் விற்பனைக்கு: வெறும் ரூ.2000 மட்டுமே!

11th Nov 2019 12:49 PM

ADVERTISEMENT


உங்கள் பாக்கெட்டிலோ, பணப்பையிலோ கிரெடிட் அல்லது டெபிட் கார்டு இருந்தால், அது பாதுகாப்பாக இருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருந்தால் அது மிகவும் தவறு.

இணையதளங்களில், ஏராளமான இணையதளங்களில் பல வாடிக்கையாளர்களின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு விவரங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு கார்டின் வகையும் விசா, ரூபே, மாஸ்டர் கார்டு போன்றவற்றை அடிப்படையாக வைத்து ரூ.350 முதல் ரூ.2,140 வரை விற்பனைக்கு வந்திருப்பதை எக்ஸ்பிரஸ் குழு கண்டுபிடித்துள்ளது.

இந்த சதிக் கும்பலிடம் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஹைதராபாத் வாசிகளின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு விவரங்கள் இருக்கிறது என்பதுதான் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

ADVERTISEMENT

இப்படியும் இருக்கு.. பாருங்கள்.. ஸ்விஸ் வங்கிக் கணக்குகளில் உரிமை கோரப்படாத இந்தியா்களின் பணம்

ஒரு கார்டின் விவரம் என்றால், அந்த கார்டின் வகை, காலாவதி தேதி அனைத்தும் விற்பனைக்கான விளம்பரத்தில் இருக்கிறது. ஒரு வேளை அந்த கார்டின் விவரங்களை ஒருவர் விலை கொடுத்து வாங்கினால், அந்த கார்டின் சிவிவி எண் வழங்கப்படும் என்று தெரிய வந்துள்ளது.

சரி என்னதான் கார்டு கிடைத்துவிட்டாலும், ஓடிபி எண் வேண்டுமே என்று நீங்கள் நினைத்தால் அதற்கும் சதிக்கும்பலிடம் பதில் இருக்கிறது. அதாவது சில சர்வதேச கேட்வேக்களில் இந்த கார்டுகளைப் பயன்படுத்தும் போது ஓடிபி ஆப்ஷனை தகர்த்துவிடலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.

ஏடிஎம் மையங்கள், கடைகளில் இருக்கும் பணம் செலுத்தும் இயந்திரம் போன்றவற்றின் மூலம் இந்த தகவல்கள் கசிவதாகவும் கூறுகிறார்கள்.

பணத்தை பத்திரமாக வைத்துக் கொள்ள வங்கிகளை நாடினால், வங்கி அட்டைகளின் விவரங்களே இப்படி விற்பனை செய்யப்பட்டால் எப்படி என்று புலம்புகிறார்கள் கிரடிட்/டெபிட் கார்டு மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT