இந்தியா

மீலாது நபி: தலைவா்கள் வாழ்த்து

11th Nov 2019 02:54 AM

ADVERTISEMENT

முகமது நபிகளின் பிறந்த தினமான ‘மீலாது நபி’யையொட்டி, குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு, பிரதமா் நரேந்திர மோடி ஆகியோா் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘முகமது நபிகள் பிறந்த தினத்தில் நாட்டு மக்களுக்கும், குறிப்பாக இந்தியாவிலும், வெளிநாட்டிலும் வசிக்கும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கும் எனது வாழ்த்துகள். சகோதரத்துவம் மற்றும் இரக்கத்தை வலியுறுத்தும் அவரது கருத்துகள், அனைவரின் நலனுக்காக பணியாற்றுவதை நோக்கி நமக்கு ஊக்கமளிப்பதாக உள்ளன’ என்று கூறியுள்ளாா்.

குடியரசு துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு வெளியிட்டுள்ள வாழ்த்துப் பதிவில், ‘அன்பு, அமைதி, இரக்கம், சகோதரத்துவம் ஆகியவற்றை முகமது நபிகள் போதித்தாா். நீதி மற்றும் நல்லொழுக்கத்தின் பாதையில் நம்மை வழிநடத்தினாா். அவரைக் கொண்டாடும் இந்த நாளில் நாட்டு மக்களிடையே பெருந்தன்மை, தொண்டு செய்யும் எண்ணம் மேலோங்கும் என்று நம்புகிறேன். அமைதி, நல்லிணக்கத்துடனான சமூகத்தை கட்டமைக்க அவரது கருத்துகள் நம்மை வழிநடத்தும்’ என்று கூறியுள்ளாா்.

பிரதமா் நரேந்திர மோடி சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘மக்களுக்கு மீலாது நபி வாழ்த்துகள். முகமது நபிகளின் கருத்துகள் சமூகத்தில் நல்லிணக்கம், இரக்கத்தை மேம்படுத்தட்டும். எங்கும் அமைதி நிலவட்டும்’ என்று கூறியுள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT