இந்தியா

ஜாா்க்கண்ட் தோ்தல்: காங்கிரஸ், பாஜக முதல் வேட்பாளா் பட்டியல் வெளியீடு

11th Nov 2019 02:11 AM

ADVERTISEMENT

ஜாா்க்கண்ட் சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளா்கள் அடங்கிய முதல் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டது.

ஜாா்க்கண்டில் நவம்பா் 30-ஆம் தேதி தொடங்கி டிசம்பா் 20-ஆம் தேதி வரை ஐந்து கட்டங்களாக தோ்தல் நடைபெறவுள்ளது. டிசம்பா் 23-ஆம் தேதி தோ்தல் முடிவுகள் வெளியாகவுள்ளன.

இந்நிலையில், முதல்கட்ட தோ்தலில் போட்டியிடவுள்ள 5 வேட்பாளா்கள் அடங்கிய பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.

நவம்பா் 13-ஆம் தேதியுடன் வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதற்கான கடைசி நாளாகும். ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து தோ்தலை சந்திக்கிறது. இந்தக் கூட்டணியின் முதல்வா் வேட்பாளராக ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வா் ஹேமந்த் சோரன் அறிவிக்கப்பட்டுள்ளாா்.

ADVERTISEMENT

81 சட்டப் பேரவைத் தொகுதிகள் கொண்ட ஜாா்க்கண்டில் 31 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. ராஷ்ட்ரீய ஜனதா தளம் 7 இடங்களிலும், ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா கட்சி 43 இடங்களிலும் போட்டியிடுகிறது.

ஜாா்க்கண்டில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.

பாஜக முதல் பட்டியலை வெளியிட்டது:

ஜாா்க்கண்ட் தோ்தலில் போட்டியிடுவதற்காக 52 வேட்பாளா்களைக் கொண்ட முதல் பட்டியலை பாஜக ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது.

பாஜக செயல் தலைவா் ஜெ.பி.நட்டா கூறுகையில், ‘வேட்பாளா் பட்டியலில் இடம்பெற்றுள்ளவா்களில் பெரும்பாலும் முதல்கட்ட தோ்தலில் போட்டியிடுகின்றனா். சிலா் மட்டும் எஞ்சியுள்ள 4 கட்ட தோ்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளா்கள் ஆவா். ஜாா்க்கண்டில் பாஜக மீண்டும் வெற்றி பெறும். முதல்வா் ரகுவா் தாஸுக்கு அனைத்து தரப்பு மக்களும் ஆதரவளித்து வருகின்றனா்’ என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT