இந்தியா

இன்று.. குறிப்பாக இன்று தீர்ப்பு வழங்கப்பட்டதன் காரணம் என்ன?

9th Nov 2019 12:27 PM

ADVERTISEMENT


புது தில்லி: அயோத்தியில் ராமஜென்ம பூமியில் ராமர் கோயில் கட்ட அனுமதி வழங்கி உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பளித்துள்ளது.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை இன்று வழங்கியுள்ளது. அரசியல்  சாசன அமர்வில் இடம்பெற்ற ஐந்து நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பை அளித்திருப்பதே இந்த தீர்ப்பின் முக்கியம்சமாகும்.

அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டதன் முக்கிய காரணம் என்ன?

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் நவம்பர் 17-ம் தேதியன்று பணி ஓய்வு பெற உள்ளார். அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அன்றைய தினம் உச்ச நீதிமன்றம் விசாரித்துத் தீர்ப்பு வழங்க முடியாது. ஏன் என்றால், விடுமுறை நாட்களில் முக்கிய வழக்குகளின் தீர்ப்பு வழங்கப்படுவதில்லை.

ADVERTISEMENT

மேலும் படிக்க.. அயோத்தி விவகாரம்: வெறுமனே, கடந்து வந்த பாதை என்று எப்படி சொல்லிவிட முடியும்?

இதனைக் கருத்தில்கொண்டே அயோத்தி வழக்கில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு நவ.13 முதல் நவ.15-க்குள்  இறுதி தீர்ப்பு வழங்கும் எனக் கூறப்பட்டு வந்தது. 

இந்நிலையில், அயோத்தி வழக்கு மக்களின் உணர்வு ரீதியிலான விவகாரம் என்பதால் எந்த சமூக பிரச்னைக்கும் இடம் தரக்கூடாது என்பதால் வெள்ளிக்கிழமை இரவு திடீரென தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட்டது. இன்று காலை (நவம்பர் 09) உச்ச நீதிமன்றம் துவங்கியதும் அயோத்தி குறித்த தீர்ப்பை வழங்கியுள்ளது. 

இன்று இரண்டாவது சனிக்கிழமை என்பதால் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு பொதுவாக விடுமுறை தினமாக இருக்கும் என்பதால் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ள எளிதாக இருக்கும் என்பதும் கருத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT