இந்தியா

அயோத்தி தீர்ப்பு வாசிப்பு: துணை முதல்வர், டிஜிபியுடன் முதல்வர் யோகி ஆதித்யநாத் அவசர ஆலோசனை!

9th Nov 2019 11:00 AM

ADVERTISEMENT

 

அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவதையொட்டி, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. 

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியிலுள்ள 2.77 ஏக்கா் சா்ச்சைக்குரிய நிலத்தை உரிமை கோருவது தொடா்பான வழக்கின் மேல்முறையீட்டு மனுக்கள் மீது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமா்வு விசாரித்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வாசிக்கப்பட்டு வருகிறது. 

இதையொட்டி, அயோத்தி மட்டுமில்லாது நாடு முழுவதுமே பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

ADVERTISEMENT

இதன் தொடர்ச்சியாக, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. அயோத்தி பகுதியில் பாதுகாப்பு குறித்து உ.பி காவல்துறை கண்காணிப்பாலளர் ஓ.பி.சிங் மற்றும் துணை முதல்வர் தினேஷ் சர்மா ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 

முன்னதாக, அயோத்தி வழக்கில் தீர்ப்பு இன்று வழங்கப்படவுள்ள நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் நாட்டின் பாதுகாப்பு குறித்து ஆலோசனை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT