புது தில்லி: அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வில் இடம்பெற்றிருக்கும் ஐந்து நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பை அளித்திருப்பதாக தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தெரிவித்துள்ளார்.
அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பை வாசித்து வருகிறது.
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தீர்ப்பை வாசிக்கத் தொடங்கினார். அதில், அயோத்தி வழக்கை விசாரித்த அரசியல் சாசன அமர்வில் இடம்பெற்றுள்ள ஐந்து நீதிபதிகளும் ஒரே தீர்ப்பை வழங்கியுள்ளனர் என்று தெரிவித்தார்.
தீர்ப்பின் முக்கிய அம்சங்களை வெளியிட 30 நிமிடங்கள் வரை ஆகும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், அரசியலுக்கு அப்பாற்பட்டு சட்டம் நிலைநாட்டப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார்.
தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்
• அயோத்தியில் ராமஜென்மபூமி பகுதியில் ராமர் கோயில் கட்ட அனுமதி. அதே சமயம், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் 2.77 ஏக்கர் நிலம் இருக்க வேண்டும்.
• அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்ட உரிய அறக்கட்டளையை 3 மாதங்களுக்குள் மத்திய அரசு உருவாக்க வேண்டும்.
• வக்ஃபு போர்டு ஏற்கும் இடத்தில், இஸ்லாமியர்களுக்கு 5 ஏக்கர் நிலம் மசூதி கட்ட ஒதுக்கப்பட வேண்டும்.
• அயோத்தியில் ராமஜென்மபூமி பகுதியில் ராமர் கோயில் கட்ட அனுமதி. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
• அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்ட உரிய அமைப்பை 3 மாதங்களுக்குள் உருவாக்க வேண்டும்.
• நிலத்துக்கு உரிமை கோரிய நிர்மோஹி அகாராவின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
• பாபர் மசூதி இருந்த இடம் முழுக்க முழுக்க தங்களுக்குத்தான் சொந்தம் என்பதை இஸ்லாமியர்கள் நிரூபிக்கவில்லை.
• இஸ்லாமியர்களுக்கு மசூதி கட்டிக் கொள்ள 5 ஏக்கர் மாற்று நிலம் வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு.
• அலகாபாத் உயர் நீதிமன்றம், அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தை மூன்றுப் பிரிவாகப் பிரித்துக் கொடுத்தது தவறு.
• நிலத்தின் உள்பகுதியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தியுள்ளனர். ஆனால் அதற்கு உரிமை கொண்டாட ஆதாரங்கள் இல்லை.
• 1992ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டது சட்டவிரோதம், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறிய செயல் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி குறிப்பிட்டார்.
• அயோத்திதான் ராமர் பிறந்த இடம் என்று இந்துக்கள் நம்புகிறார்கள்.
• நிர்மோகி அகாரா வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல.
• சர்ச்சைக்குரிய நிலத்துக்கு ஒட்டுமொத்தமாக சன்னி வஃபு வாரியம் உரிமை கோர முடியாது.
• 1857ஆம் ஆண்டுக்கு முன்புவரை இந்துக்கள் சர்ச்சைக்குரிய கட்டடத்தின் உள் பகுதியில் வழிபட தடையில்லை.
மேலும் படிக்க.. அயோத்தி விவகாரம்: வெறுமனே, கடந்து வந்த பாதை என்று எப்படி சொல்லிவிட முடியும்?
• சன்னி பிரிவுக்கு எதிராக வக்ஃபு வாரியம் தொடர்ந்த மனு தள்ளுபடி.
• வெறும் கட்டுமானம் இருக்கிறது என்பதற்காக மட்டும் அந்த இடத்தை சொந்தம் கொண்டாட முடியாது.
• பாபர் மசூதி பாபர் காலத்தில்தான் கட்டப்பட்டது என்பதை ஏற்றுக் கொள்கிறோம்.
• ஆங்கிலேயேர்கள் வருவதற்கு முன்பே அயோத்தியில் ராமர் மற்றும் சீதாவை இந்துக்கள் வணங்கியதற்கு ஆதாரம் உள்ளது.
• மசூதிக்கு கீழ் இருந்ததாகக் கூறப்படும் கட்டடம் இஸ்லாமிய முறையிலான கட்டடம் இல்லை என்று தொல்லியல் துறை ஆய்வில் தெரிவித்துள்ளது.
• நிலம் தொடர்பான தொல்லியல் துறையின் ஆய்வறிக்கையை நிராகரித்து விட முடியாது.
• கடவுள் நம்பிக்கையின் அடிப்படையில் நிலத்துக்கு உரிமையாளர் யார் என்பதை தீர்மானிக்க முடியாது.
• அயோத்தியில் ராமர் பிறந்தார் என்கிற இந்துக்களின் நம்பிக்கையை சந்தேகத்துக்கு உட்படுத்த முடியாது.
• நிலம் தொடர்பான தொல்லியல் துறையின் ஆய்வறிக்கையை நிராகரித்து விட முடியாது.
• பாபர் மசூதி கட்டப்படுவதற்கு முன்பு அங்கிருந்த கட்டடம் இஸ்லாமிய கட்டுமானம் அல்ல.
மேலும் படிக்க.. அயோத்தியில் ராமஜென்ம பூமியில் ராமர் கோயில் கட்டலாம்: உச்ச நீதிமன்றம் பரபரப்புத் தீர்ப்பு
• அயோத்தி நிலத்துக்கு உரிமை கோரி ஷியா வாரியத்தின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவித்தார்.
• நிலத்துக்கு உரிமை கோரிய நிர்மோஹி அகாரா மனுவில் ஆதாரங்கள் இருப்பதாகத் தெரியவில்லை.
• இறை நம்பிக்கைக்குள் செல்வது நீதிமன்றத்துக்கு தேவையற்றது என கருதுகிறோம்.
• காலி இடத்தில் பாபர் மசூதி கட்டப்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது.
• இந்திய தொல்லியல் துறை கொடுத்துள்ள ஆதாரங்கள் ஆராயப்பட்டுள்ளன.
• ஒரு மதத்தினரின் நம்பிக்கை, மற்ற மதத்தினரின் நம்பிக்கையை தடுப்பதாக இருக்கக் கூடாது.
• மேலும், அரசியலுக்கு அப்பாற்பட்ட சட்டம் நிலைநாட்டப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார்.