இந்தியா

ராமர் கோயில் கட்டுமானத்துக்கு ரூ. 5 லட்சம் நிதி: அஸ்ஸாம் இஸ்லாமிய அமைப்பு

9th Nov 2019 06:37 PM

ADVERTISEMENT


அஸ்ஸாமைச் சேர்ந்த 21 இஸ்லாமிய சமுதாயங்களைக் கொண்ட அமைப்பு, அயோத்தியில் ராமர் கோயிலைக் கட்ட ரூ. 5 லட்சம் நிதி வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடம் ஹிந்துக்களுக்கே சொந்தமானது என்றும் அந்த இடத்தில் ராமர் கோயில் கட்டலாம் என உச்சநீதிமன்றம் இன்று (சனிக்கிழமை) வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியது. இந்நிலையில், அங்கு ராமர் கோயில் கட்டுவதற்காக ரூ. 5 லட்சம் நிதி வழங்குவதாக 21 இஸ்லாமிய சமுதாயங்களைக் கொண்ட அமைப்பு தெரிவித்துள்ளது.

அயோத்தி வழக்கில் ஐந்து நீதிபதிகளும் ஒரே தீர்ப்பு: தலைமை நீதிபதி அறிவிப்பு! தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்!!

இதுகுறித்து, அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், அஸ்ஸாம் சிறுபான்மையினர் வளர்ச்சி வாரியத்தின் தலைவருமான மோமினுல் அவால் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்,

"உச்சநீதிமன்றம் தனது வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு மூலம் ராமர் கோயில் கட்டுவதற்கான தடைகளைத் தகர்த்துள்ளது. அந்தக் கோயிலைக் கட்டுவதற்காக அமைக்கப்படவுள்ள அறக்கட்டளைக்கு ரூ. 5 லட்சம் நிதி வழங்கப்படும்" என்றார்.

இதனிடையே அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி, இந்தத் தீர்ப்பை மதிப்பதாகவும், நாட்டு மக்களும், அஸ்ஸாம் மக்களும் அமைதியை நிலைநாட்டி சமூக வலைதளங்களில் பிரச்னை ஏற்படுத்தக் கூடிய பதிவுகளை பதிவிடக் கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது.

ADVERTISEMENT

Tags : Ayodhya Case
ADVERTISEMENT
ADVERTISEMENT