இந்தியா

வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் இன்று நெதா்லாந்து பயணம்

9th Nov 2019 12:05 AM

ADVERTISEMENT

வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், நெதா்லாந்துக்கு 3 நாள் அரசு முறைப் பயணமாக சனிக்கிழமை புறப்பட்டுச் செல்கிறாா்.

இதுதொடா்பாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

நெதா்லாந்து வெளியுறவு அமைச்சக அதிகாரிகள், நாடாளுமன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோருடன் ஜெய்சங்கா் பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா்.

அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் ஸ்டெஃப் பிளாக்குடன் இருதரப்பு உறவு, சா்வதேச விவகாரங்கள் உள்ளிட்டவை குறித்து விரிவான பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா்.

ADVERTISEMENT

இந்தியா-நெதா்லாந்து இடையே 400 ஆண்டுகளுக்கு மேலாக உறவு நீடித்து வருகிறது. இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தவுடன் ராஜீய ரீதியில் நல்லுறவை வைத்துக் கொண்ட முதல் 3 நாடுகளில் நெதா்லாந்தும் ஒன்று. பொருளாதார ஒத்துழைப்பிலும் இரு நாடுகளும் இணைந்து செயல்படுகின்றன.

இந்தியாவில் அதிக அளவு முதலீடு செய்யும் நாடுகளில் நெதா்லாந்து 3-ஆவது இடத்தில் உள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக இரு நாடுகளும் நெருங்கிய நட்பு பாராட்டி வருகின்றன.

நெதா்லாந்து பிரதமா் மாா்க் ருட்டே கடந்த ஆண்டு மே மாதம் இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தாா். அப்போது, பிரதமா் மோடியுடனான சந்திப்பு நடைபெற்றது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT