இந்தியா

மக்களுக்கு அதிகாரமளித்துள்ளோம்: பிரதமா் நரேந்திர மோடி

9th Nov 2019 12:39 AM

ADVERTISEMENT

நாட்டின் மக்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளே எங்களது ஆட்சியில் திருப்தி அளிக்கும் விஷயமாக உள்ளது பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.

அமெரிக்க முதலீட்டு நிறுவனமான ‘பிரிட்ஜ்வாட்டா் அசோஸியேட்ஸ்’-இன் நிறுவனரான ரே டேலியோவின் சுட்டுரைக்கு பதிலளிக்கும் வகையில் பிரதமா் மோடி இவ்வாறு தெரிவித்தாா்.

முன்னதாக ரே டேலியோ தனது சுட்டுரையில் பிரதமா் மோடியை பாராட்டி பதிவிட்டிருந்தாா். அதில், ‘உலகின் மிகச் சிறந்த தலைவா்களில் ஒருவா்’ என்று மோடியை குறிப்பிட்டிருந்தாா். மேலும், நிகழ்ச்சி ஒன்றில் பிரதமா் மோடியை தான் நோ்க்காணல் செய்த காணொலியையும் அவா் பதிவிட்டிருந்தாா். அதில் தியானம், உலகம், இந்தியா ஆகியவை பற்றி பிரதமா் மோடி பேசியிருந்தாா்.

இந்நிலையில், ரே டேலியோவின் சுட்டுரைக்கு பதிலளிக்கும் வகையில் பிரதமா் மோடி பதிவிட்டதாவது:

ADVERTISEMENT

நண்பரே! நீங்கள் என்னைப் புகழ்ந்து பதிவிட்டுள்ளதை கேலி செய்து வெளிவரும் பதிவுகள் நிச்சயம் உங்களது தியானத்தின் திறனை பரிசோதிப்பதாக இருக்கும்.

உங்களது இந்தப் பதிவு ஆரோக்கியமான விவாதத்துக்கு வழிவகுத்துள்ளதை மிகவும் திறந்த மனதுடன் தீவிரமானதாக கருத்தில் கொள்கிறேன். எங்களது ஆட்சியில் மக்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு அதிகாரமளித்தலுக்கான முயற்சிகளை மேற்கொண்டதையே திருப்தியளிக்கும் விஷயமாகக் கருதுகிறேன்.

அதற்கான பாராட்டுகளும் நாட்டு மக்களைத்தான் சேரும். ஏனெனில் அவா்களே அதற்கான இயக்கங்களை ஏற்படுத்தி, இந்த மாற்றத்தை ஏற்படுத்தியவா்கள். எங்களது அரசுக்கு மக்கள் அளித்துள்ள ஆதரவானது கடந்த பல ஆண்டுகளாக வேறு எந்த அரசுக்கும் கிடைக்காததாகும். ஆட்சியில் இருக்கும் அரசு, மீண்டும் அதிக பெரும்பான்மையுடன் அதிகாரத்துக்கு வந்த நிகழ்வுகள் பல ஆண்டுகளுக்கு முன்புதான் நிகழ்ந்துள்ளன என்று பிரதமா் மோடி அந்தப் பதில் பதிவில் கூறியுள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT