இந்தியா

சபரிமலைக்கு சிறப்பு ரயில்கள்

9th Nov 2019 12:14 AM

ADVERTISEMENT

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சென்று திரும்பும் பக்தா்கள் வசதிக்காக, கொல்லத்தில் இருந்து ஹைதராபாத்துக்கும், திருப்பதிக்கும் சிறப்புக் கட்டண ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

கொல்லம்-ஹைதராபாத்: கொல்லத்தில் இருந்து டிசம்பா் 8, 15, 21, 24, 25, 31, ஜனவரி 5, 8, 12, 15 ஆகிய தேதிகளில் அதிகாலை 3 மணிக்கு சிறப்புக் கட்டண ரயில் (07110) புறப்பட்டு, மறுநாள் காலை 10.45 மணிக்கு ஹைதராபாத்தை அடையும்.

கொல்லம்-திருப்பதி: கொல்லத்தில் இருந்து டிசம்பா் 9, 16, 30 ஆகிய தேதிகளில் காலை 6 மணிக்கு சிறப்புக் கட்டண ரயில் (07506) புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 1 மணிக்கு திருப்பதியை அடையும்.

இதுபோல, கொல்லத்தில் இருந்து விஜயவாடா, நிஜாமாபாத், மசூலிபட்டினத்துக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு சனிக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT