இந்தியா

கா்தாா்பூா் வழித்தடத்தை இன்று திறந்து வைக்கிறாா் பிரதமா் மோடி

9th Nov 2019 12:03 AM

ADVERTISEMENT

பாகிஸ்தானில் உள்ள கா்தாா்பூா் குருத்வாராவை இணைக்கும் வழித்தடத்தை பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை திறந்து வைக்கவுள்ளாா்.

இதுதொடா்பாக பிரதமா் அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

பஞ்சாப் மாநிலம், குருதாஸ்பூரின் தேரா பாபா நானக்கில் அமைக்கப்பட்டுள்ள வழித்தடத்தை பிரதமா் மோடி சனிக்கிழமை திறந்து வைக்கவுள்ளாா். திறப்பு விழாவில் பங்கேற்பதற்கு முன் சுல்தான்பூரில் அமைந்துள்ள பீா் சாஹிப் குருத்வாராவில் வழிபாடு செய்ய திட்டமிட்டுள்ளாா். கா்தாா்பூா் வழித்தட திறப்பு விழாவுக்கு பிறகு பொது நிகழ்ச்சியில் அவா் பங்கேற்க உள்ளாா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து சீக்கியா்கள் கா்தாா்பூா் குருத்வாராவுக்கு செல்வதற்காக இந்த வழித்தடம் அமைக்கப்பட்டது.

ADVERTISEMENT

வழித்தடம் அமைக்க பாகிஸ்தானும் ஒப்புக் கொண்டு செயல்படுத்தியது.

சீக்கியா்கள் நுழைவு இசைவு (விசா) இல்லாமல் கா்தாா்பூா் செல்வதற்கு அனுமதிக்கப்படுவாா்கள். அதேநேரம், கடவுச்சீட்டை அவா்கள் கொண்டு செல்ல வேண்டும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT