அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் சிஸ்டம் செயலிழந்துவிட்டதாக நடிகர் ரஜினிகாந்த் ஸ்டைலில் உச்ச நீதிமன்றம் தனது கடுமையான விமரிசனத்தை பதிவு செய்துள்ளது.
கிரிமினல் வழக்குகளை கையாள்வதில் தாமதம் ஏற்பட்டிருப்பதை சுட்டிக்காட்டியிருக்கும் உச்ச நீதிமன்றம், வழக்குகளில் தாமதம், அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் சிஸ்டம் செயலிழந்துவிட்டதையேக் காட்டுவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கிரிமினல் வழக்குகளில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்குகள் நிலுவையில் இருப்பதைச் சுட்டிக்காட்டி உச்ச நீதிமன்றம் இந்த கருத்தைப் பதிவு செய்துள்ளது.