இந்தியா

'மெக் டொனால்ட்' தலைமை செயல் அதிகாரி திடீர் பணியிடை நீக்கம்! காரணம் என்ன தெரியுமா?

4th Nov 2019 11:45 AM | Muthumari

ADVERTISEMENT

 

பிரபல துரித உணவு நிறுவனமான மெக் டொனால்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்டீவ் ஈஸ்டர்ப்ரூக் திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அந்நிறுவனத்தில் பணிபுரிந்த பெண் ஊழியர் ஒருவருடன் ஒருமித்த தொடர்பு வைத்திருந்ததன் காரணமாக, அவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

பிரபல துரித உணவு நிறுவனமான மெக் டொனால்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக கடந்த 2015ம் ஆண்டு ஸ்டீவ் ஈஸ்டர்ப்ரூக் நியமிக்கப்பட்டார். சமீபத்தில் அந்நிறுவனத்தில் பணிபுரிந்த பெண் ஊழியர் ஒருவருடன் தொடர்பில் இருந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்த விசாரணையில், தன் மீதுள்ள தவறை ஸ்டீவ் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் நிறுவனம் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவதாகத் தெரிவித்துள்ளார். 

ADVERTISEMENT

இதையடுத்து, நிறுவனத்தின் விதிமுறை மீறி நடந்துகொண்டதாக அவரை பணியிடை நீக்கம் செய்து நிறுவனம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அவருக்கு பதிலாக நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக கிறிஸ் கெம்ப்சின்ஸ்கி(Chris Kempczinski) என்பவர் நியமிக்கப்ட்டுள்ளார். 

குற்றம் சாட்டப்பட்ட 52 வயதான ஸ்டீவ், ஏற்கனவே விவகாரத்து ஆனவர். இவருக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். மேலும், 1993ம் ஆண்டு முதல் இவர் மெக் டொனால்ட் குழுமத்தில் பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT