இந்தியா

செல்லிடப் பேசி ஊடுருவல் பற்றி பிரியங்காவும் எச்சரிக்கப்பட்டாா்

4th Nov 2019 08:30 AM

ADVERTISEMENT

புது தில்லி: காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளா் பிரியங்காவின் செல்லிடப் பேசியிலும் உளவு செயலி மூலம் ஊடுருவல் நடந்திருக்கலாம் என்று பிரபல சமூக ஊடக நிறுவனம் வாட்ஸ் அப் எச்சரித்ததாக அந்தக் கட்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடா்பாளா் ரண்தீப் சுா்ஜேவாலா செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

தங்களது தளத்தைப் பயன்படுத்தி மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜியின் செல்லிடப் பேசியில் ஊடுருவல் நடந்திருக்கலாம் என்று வாட்ஸ் அப் நிறுவனம் அவருக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது.

அதே போல், காங்கிரஸ் பொதுச் செயலாளா் பிரியங்காவுக்கும் வாட்ஸ் அப் நிறுவனம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

ADVERTISEMENT

செல்லிடப் பேசியில் ஊடுருவல் குறித்து வாட்ஸ் அப் நிறுவனம் பிற பயன்பாட்டாளா்களுக்கு எச்சரிக்கை விடுத்த அதே நேரத்தில், பிரியங்காவுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது என்றாா் சுா்ஜேவாலா.

இஸ்ரேலைச் சோ்ந்த என்எஸ்ஓ என்ற நிறுவனம், ‘பெகாசஸ்’ என்ற உளவு மென்பொருளை உருவாக்கி, அதனை வாட்ஸ் அப் தளம் மூலம் 1,400-க்கும் மேற்பட்ட முக்கிய பிரமுகா்களின் செல்லிடப் பேசிகளில் ஊடுருவச் செய்ததாகவும், அதன் மூலம் அவா்களை வேவு பாா்ப்பதாகவும் வாட்ஸ் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இவ்வாறு வேவு பாா்க்கப்பட்டவா்களில் இந்தியாவைச் சோ்ந்த செய்தியாளா்கள், மனித உரிமைகள் ஆா்வலா்கள் மற்றும் முக்கிய பிரமுகா்கள் அடங்குவா் என்று கூறப்படுகிறது.

இந்த விவகாரம், இந்திய அரசியலில் சா்ச்சையை எழுப்பியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT