புது தில்லி: மொபைல் மற்றும் லேண்ட்லைன் தொலைபேசிகளில் இன்கமிங் அழைப்புக்கான ரிங்டோன் நேரத்தைக் குறைத்து டிராய் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதுதொடர்பாக டிராய் வெள்ளியன்று விடுத்துள்ள அறிக்கையில் இனி இன்கமிங் அழைப்புக்கான ரிங்டோன் நேரங்கள் செல்ஃபோனில் 30 விநாடிக்களாகவும், லேண்ட்லைன் தொலைபேசிகளில் ஒரு நிமிடமாகவும் நிர்ணயம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஜியோ நிறுவனமானது தனது நெட்ஒர்க் இணைப்புகளை பிற நெட்ஒர்க் இணைப்புகளில் இருந்து அழைக்கும் இன்கமிங் அழைப்புகளுக்கான ரிங்டோன் நேரத்தைக் 30 வினாடிகளாக குறைத்தது.
இதன்காரணமாக இன்கமிங் அழைப்பைத் தவிர்ப்பதன் மூலம் தனது நெட்வொர்க்கில் அவுட்கோயிங் அழைப்பை அதிகரித்ததாக ஜியோ மீது மற்ற நிறுவனங்கள் புகார் அளித்தன. தாங்களும் அவ்வாறே செய்வதாக தெரிவித்தன.
இந்நிலையில்தான் டிராய் நிறுவனம் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.