இந்தியா

சிவ சேனை நினைத்தால் ஆட்சியமைக்க தேவையான ஆதரவைப் பெற முடியும்: சஞ்சய் ராவத்

1st Nov 2019 10:38 AM

ADVERTISEMENT

 

மகாராஷ்டிரத்தில் பாஜக-சிவசேனை கூட்டணி வெற்றி பெற்றாலும், முதல்வா் பதவியை தங்களுக்கு இரண்டரை ஆண்டுகள் தர வேண்டுமென்ற சிவசேனையின் வலியுறுத்தலால், ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடிக்கிறது.

சுழற்சி முறையில் முதல்வா் பதவியை தங்களுக்கும் அளிக்க வேண்டும், ஆட்சியில் சம பங்கு அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை சிவ சேனை முன்வைத்துள்ளது.

288 இடங்களைக் கொண்ட மகாராஷ்டிர சட்டப் பேரவையில், பாஜக 105 இடங்களிலும், சிவசேனை 56 இடங்களிலும் வெற்றி பெற்றன. ஆட்சியமைக்க 145 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை ஏற்ற நிலையில் பாஜக-சிவசேனை இடையே இதுவரை கருத்தொற்றுமை ஏற்படவில்லை.

ADVERTISEMENT

இந்நிலையில், சிவ சேனை நினைத்தால் ஆட்சியமைக்க தேவையான ஆதரவைப் பெற முடியும் என அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத், செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

மகாராஷ்டிரத்தில் சிவ சேனை ஆட்சியமைக்க முடிவெடுத்தால் அதற்கு தேவையான ஆதரவை எளிதாகப் பெற முடியும். இங்கு சம பங்கு ஆட்சியமைக்க மட்டும் தான் சிவ சேனை, பாஜக கூட்டணிக்கு மக்கள் வாக்களித்துள்ளனர். சிவ சேனை கட்சியிலிருந்து தான் மகாராஷ்டிர முதல்வர் தேர்வு செய்யப்பட வேண்டும் எனவும் மக்கள் விரும்புகின்றனர் என்று தெரிவித்தார்.

மகாராஷ்டிரத்தில் காங்கிரஸுக்கு 44, தேசியவாத காங்கிரஸுக்கு 54 எம்எல்ஏக்கள் உள்ளனா். இவா்களுடன் சிவசேனையின் 56 எம்எல்ஏக்கள் இணைந்தால் ஆட்சி அமைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Shiv Sena
ADVERTISEMENT
ADVERTISEMENT