இந்தியா

தில்லி விமான நிலையத்தில் இருந்த மர்ம பையில் வெடிபொருள் இருப்பது கண்டுபிடிப்பு: பதற்றம்

1st Nov 2019 11:43 AM

ADVERTISEMENT


புது தில்லி: புது தில்லியில் இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மர்ம பையில் ஆர்டிஎக்ஸ் போன்ற வெடிபொருள் இருப்பது முதற்கட்ட சோதனையில் உறுதி செய்யப்பட்டிருப்பதால் பதற்றம் அதிகரித்துள்ளது.

நள்ளிரவு 1 மணியளவில் கேட்பாரற்றுக் கிடந்த கருப்பு நிறத்திலான இழுத்துச் செல்ல சக்கரங்கள் பொருத்தப்பட்டிருக்கும் பை ஒன்று விமான நிலையத்தின் 3வது முனையத்தில் பாதுகாப்புப் படை வீரர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. 

இது குறித்து உடனடியாக மூத்த அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, உடனடியாக அது வெடிகுண்டு பரிசோதனை கருவி மூலம் பரிசோதிக்கப்பட்டதில், அதில் ஆர்டிஎக்ஸ் போன்ற வெடிபொருள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

உடனடியாக அப்பகுதி பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, பையை குளிரூட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சுமார் 24 மணி நேரம் பையை குளிரூட்டி, பிறகுதான் அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து ஒரு சில மணி நேரம், விமான நிலையத்துக்குள் பயணிகள் உள்ளே செல்லவும், வெளியேறவும் அனுமதிக்கப்படாததால் தில்லி விமான நிலையத்தில் பதற்றம் நிலவியது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT