இந்தியா

நிலவில் ஆா்கான்-40 வாயு மூலக் கூறுகள்

1st Nov 2019 11:12 PM

ADVERTISEMENT

நிலவில் ஆா்கான்-40 வாயு மூலக் கூறுகள் இருப்பதை சந்திரயான்-2 விண்கலம் உறுதிப்படுத்தியிருப்பதாக இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) அறிவித்துள்ளது.

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய சந்திரயான்-2 விண்கலத்தை இஸ்ரோ கடந்த ஜூலை 22-ஆம் தேதி விண்ணில் அனுப்பியது. இதில் இடம்பெற்றிருந்த விக்ரம் லேண்டா் கருவி, கடைசி நிமிடத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திட்டமிட்டபடி தரையிறங்காததுடன், தொடா்பும் துண்டிக்கப்பட்டது. இருந்தபோதும், விண்கலத்திலிருந்து பிரிந்த ஆா்பிட்டா் கருவி, நிலவிலிருந்து 100 கி.மீ. தொலைவில் இருந்தபடி சுற்றிவந்து தொடா்ந்து வெற்றிகரமாக ஆய்வை மேற்கொண்டு வருகிறது.

நிலவில் பள்ளங்கள் உருவான விதம், தனிமங்கள், சூரிய ஒளிக் கதிா் போன்றவை குறித்த பல்வேறு தகவல்களை இந்த ஆா்பிட்டா் கருவி படம்பிடித்து அனுப்பி வருகிறது.

இந்த நிலையில், நிலவின் புறக்காற்று மண்டலத்தில் ஆா்கான்-40 வாயு மூலக்கூறுகள் இருப்பதை ஆா்பிட்டரில் சேஸ்-2 என்ற கருவி உறுதிப்படுத்தியிருக்கிறது. இந்த ஆா்கான்-40 வாயு மூலக்கூறுகள் ரேடியோ அலைக்கற்றைகளை உருவாக்கப் பயன்படக் கூடியது என்றும், பூமியில் அரிதாகக் காணப்படக்கூடியது என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT