ஜி-20 மாநாட்டில் மோடி- டிரம்ப் பேச்சுவார்த்தை

ஜப்பானில் அடுத்த மாதம் நடைபெற உள்ள ஜி-20 மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பிரதமர் மோடி இருவரும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். 
ஜி-20 மாநாட்டில் மோடி- டிரம்ப் பேச்சுவார்த்தை

ஜப்பானில் அடுத்த மாதம் நடைபெற உள்ள ஜி-20 மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பிரதமர் மோடி இருவரும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். 
இச்சந்திப்பின்போது, அமெரிக்க- இந்தியா இடையிலான உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாக விரிவான பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. 
மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து, மோடியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட அமெரிக்க அதிபர் டிரம்ப், வரலாற்று சிறப்புமிக்க வெற்றி பெற்றதற்காக வாழ்த்துகளை தெரிவித்ததாக  வெள்ளை மாளிகை வட்டாரங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தன.  மேலும், வெள்ளை மாளிகை வட்டாரங்கள் கூறியிருப்பதாவது: ஜப்பான் நாட்டின் ஒசாகாவில் அடுத்தமாதம் 28,29 தேதிகளில் நடைபெற உள்ள ஜி-20 மாநாட்டில் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் முத்தரப்பு பேச்சுவார்த்தையும் நடைபெற உள்ளது. இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் மேற்கொள்ள வேண்டிய தொலைநோக்குத் திட்டங்கள் குறித்து இந்த மாநாட்டில் விரிவாக விவாதிக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
தெற்கு சீனக்கடலில், தனது ஆதிக்கத்தை தொடர்ந்து மேற்கொண்டு வரும் சீனா,  நடப்பு ஆண்டில் மட்டும் 3.5 கோடி அமெரிக்க டாலர்கள் (ரூ. 242 லட்சம் கோடி ) என்ற அளவில் வர்த்தகம் செய்துள்ளது. தற்போது, தெற்கு சீனக்கடல் பிராந்தியத்தில் வர்த்தக ரீதியான தொடர்புகளை அதிகரிப்பதில் சீனா முன்னணியில் உள்ளது.  
சீனா ஏற்கெனவே, புருனே, இந்தோனேஷியா, மலேசியா, பிலிப்பின்ஸ், தைவான் மற்றும் வியத்நாம் போன்ற நாடுகளுடன் கடல்வழியான வர்த்தகத் தொடர்பில் சீனா கடும் போட்டியை அளித்து வருகிறது.  தெற்கு சீனக்கடல் பிராந்தியத்தில் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் நாடுகளுக்கு எந்தவித வர்த்தகத் தொடர்பும் இல்லை. இதனை மேம்படுத்துவது தொடர்பாக முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
ஏற்கெனவே, அமெரிக்கா- இந்தியா இடையே பாதுகாப்புத்துறையில், ஒருங்கிணைந்து பணியாற்றவும், கூட்டு ராணுவ பயிற்சி மேற்கொள்வதிலும், அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொள்வதிலும் மகத்தான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ராணுவ தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக கண்டுபிடிப்புகளை பகிர்ந்து கொள்வது, பாதுகாப்புத்துறையில் கூட்டாக இயங்குவது, வர்த்தக மேம்பாடு ஆகியவை 6 மடங்கு அதிகரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com