தோல்வியிலும் அமேதி மக்களுடன் இருந்தேன், வெற்றியிலும் அவர்களுடன் தான் இருப்பேன்: ஸ்மிருதி இரானி

தேசிய அரசியலில் உத்தரப் பிரதேசத்தில் உள்ள அமேதி மக்களவைத் தொகுதி மீண்டும் கவனம் பெற்றுள்ளது. 
தோல்வியிலும் அமேதி மக்களுடன் இருந்தேன், வெற்றியிலும் அவர்களுடன் தான் இருப்பேன்: ஸ்மிருதி இரானி

தேசிய அரசியலில் உத்தரப் பிரதேசத்தில் உள்ள அமேதி மக்களவைத் தொகுதி மீண்டும் கவனம் பெற்றுள்ளது. அதற்கு காரணம் காங்கிரஸின் கோட்டையாக இருந்த இந்தத் தொகுதியைக் கைப்பற்றி விட்டார் பாஜக வேட்பாளரும், மத்திய அமைச்சருமான ஸ்மிருதி இரானி.

2004, 2009, 2014-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் தொடர்ந்து மூன்று முறை ராகுல் வெற்றி பெற்றார். அதில் 2014-ஆம் ஆண்டு ராகுலை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியைத் தழுவியவர்தான் ஸ்மிருதி இரானி. தொலைக்காட்சி நடிகையான இவர், பாஜகவில் இணைந்த பிறகு கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஆனார். 

செய்தியாளர் சந்திப்புகளிலும், தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று கட்சியின் நிலைப்பாட்டையும், கொள்கையும் தெளிவாக எடுத்துக் கூறி கட்சி மேலிடத் தலைவர்களின் நன்மதிப்பைப் பெற்றார். மேலும் அவரது கவனம் முழுவதும் அமேதி தொகுதியில்தான் இருந்தது. 

நடந்து முடிந்த மக்களவைத் தொகுதியில், அமேதி தொகுதியில் மீண்டும் ராகுலை எதிர்த்து களமிறக்கப்பட்டார். இந்தத் தொகுதியில் இவர் வெற்றி பெற்றுவிடுவார் என்பதை ராகுல் முன்கூட்டியே மோப்பம் பிடித்துவிட்டதாலோ என்னவோ, "பாதுகாப்பு'' கருதி, கேரளத்தின் வயநாடு தொகுதியிலும் ஒரு வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

இந்நிலையில், 55,120 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுலை தோற்கடித்து, அமேதியின் தேர்தல் வரலாற்றை மாற்றி எழுதி சாதனை படைத்திருக்கிறார். இதுகுறித்து ஸ்மிருதி இரானி கூறியதாவது:

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் மீது காங்கிரஸ் தலைவர் ராகுல் நம்பிக்கை வைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அமேதி தொகுதி மக்கள் தங்களின் வாக்குகளின் மூலம் பாஜக மீது வைத்துள்ள நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர். அதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். கடந்த தேர்தலில் நான் தோற்றாலும், 5 ஆண்டுகளாக அமேதி தொகுதி மக்களுடன் தான் இருந்தேன். தற்போதும் அவர்களுடன் தான் இருக்கப்போகிறேன் வெற்றியுடன்! என்று தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com